எ.கே.சீனிவாசகம் & பிரதர்ஸ் நிறுவனம், இது தற்போது எ.கே.எஸ் நிவாஸ் சென்.பெர்ஹாட் நிறுவனம் என அழைக்கப்படுகிறது. இந்நிறுவனம் முதன்முதலில் 1948 ஆம் ஆண்டில் திரு.சீனிவாசகம் அவர்களால்
பட்டர்வொர்த், சுங்கை நியோர் வட்டாரத்தில் தொடங்கப்பட்டது.
இந்த சிறிய அளவிலான குடும்ப வணிகம் , பின்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாரம்பரிய முறையில் நல்லெண்ணெய் தயார்படுத்தி விற்பனையைத் தொடங்கப்பட்டது. பின்னர், பூஜைப் பொருட்கள், உணவு தயாரிக்கும் பொருட்கள் ஆகியவற்றை உற்பத்திச் செய்து பீடுநடைப்போட்டு வருகிறது என்றால் மிகையாகாது.
தொடர்ந்து, 1980-ஆம் ஆண்டு முதல் தனது உற்பத்தியை ஆப்ரிக்கா, சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
அண்மையில் எ.கே.எஸ் நிவாஸ் சென்.பெர்ஹாட் நிறுவனம் கோவிட்-19ல் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உதவும் வகையில் மாநில அரசிடம்
மளிகை பொருட்கள் உள்ளடக்கிய 1,000 பொட்டலங்கள் வழங்கியது.
“எ.கே.எஸ் நிவாஸ் நிறுவனம் ஏறக்குறைய ரிம60,00 மதிக்கத் தக்க மளிகைப் பொருட்களை 1,000 பொட்டலமாக பி40 குடும்பங்களுக்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் பகிர்ந்தளிக்கப்பட்டது.
“ஒவ்வொரு பொட்டலத்திலும் இந்நிறுவன தயாரிப்பு உணவுப் பொருட்களும் இதர சமையல் பொருட்களும் இடம்பெற்றதாகவும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் மனிதாபிமான உணர்வோடு எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் இந்த பங்களிப்பு நல்கினோம்,” என மூன்றாம் தலைமுறையாக இந்நிறுவனத்தை வழிநடத்தும் அதன் இயக்குநரான மு.டிவேந்திரன் முத்துச்செய்திகள் நாளிதழ் மேற்கொண்ட நேர்காணலில் கூறினார். இம்மாதிரியான சமூகத் திட்டங்கள் தொடர்ந்து இந்நிறுவனம் மேற்கொள்ளும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“கோவிட்-19 தொற்றுநோயால் பொருளாதார ரீதியில் சிறிது சரிவுக் கண்டிருந்தாலும் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்நிறுவனப் பொருட்களின் விலையை அதிகரிக்கவில்லை,” என்றார்.
” மேலும், கோவிட்-19 தாக்கத்தினை பினாங்கில் குறைக்க அனைவரும் மத்திய அரசு நிர்ணயித்துள்ள நிர்வாக நடைமுறையை (எஸ்.ஓ.பி) கடுமையாக பின்பற்றுவது அவசியம். விரைவில் பினாங்கில் தொடங்கவிருக்கும் தேசிய தடுப்பூசி திட்டத்தினை அனைவரும் ஆதரித்து அதன் பின்னரும் எஸ்.ஓ.பி-ஐ பின்பற்றினால் இந்நோயின் சங்கிலியை உடைத்து இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும்,” என வணிகத்துறையில் டிப்ளோமா படிப்பை முடித்து பரம்பரை தொழிலில் ஈடுப்பட்டுள்ள டிவேந்திரன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
தொடர்ந்து, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கீழ் செயல்படும் ஆலயங்களின் திருவிழா பத்திரிக்கை, பினாங்கு அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் துணை மின்நிலையம் அமைத்தல் ஆகிய சமூகத் திட்டங்களையும் எ.கே.எஸ் நிவாஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது பாராட்டக்குரியதாகும்.
110 தொழிலாளர்கள் பணிப்புரியும் எ.கே.எஸ் நிவாஸ் சென். பெர்ஹாட் நிறுவனம் அரசு நிர்ணயித்துள்ள எஸ்.ஓ.பி-ஐ முறையாக பின்பற்றப்படுவதை முத்துச் செய்திகள் நாளிதழ் மேற்கொண்ட கண்ணோட்டத்தில் காண முடிந்தது.
எதிர்காலத்தில் உணவு மற்றும் குளிர்பானங்கள் சம்பந்தப்பட்ட உற்பத்தியை அதிகரிக்கவும் மேம்படுத்தவும் இந்நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது