மைக்ரான் நிறுவனத்தின் இரண்டாவது ஸ்மார்ட் உற்பத்தி ஆலையை திறப்பு விழாக் கண்டது.

Admin

பத்து காவான் – மைக்ரான் மலேசியா இன்று தனது இரண்டாவது அதிநவீன ஸ்மார்ட் உற்பத்தி ஆலையை பத்து காவான் தொழில் பூங்காவில் (பி.கே.ஐ.பி) அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழாக் கண்டது. இது பி.கே.ஐ.பி இல் அதன் முதல் ஆலை இருக்கும் அதே தலத்தில் அமைந்துள்ளது.

மைக்ரான் மலேசியாவின் துணைத் தலைவரும், மேலாளருமான அமர்ஜித் சிங் சந்து கூறுகையில், இந்த விரிவாக்கம் மைக்ரான் மலேசியாவிற்கு உற்பத்தியை அதிகரிக்கவும் அதன் சோதனை திறன்களை மேலும் வலுப்படுத்தவும் உதவுகிறது.
“இந்த விரிவாக்கம் குறைக்கடத்தி மேம்பாடு மற்றும் உற்பத்தியின் சிறப்பை முன்னேற்றுவதற்கான எங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

 

“இதன் மூலம், செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனங்கள் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய NAND (flash memory), PCDRAM (phase-change random access memory) மற்றும் solid-state drive (SSD) தயாரிக்கிறது.

“பத்து காவானில் எங்களின் புதிய உற்பத்தி ஆலையை அதிகாரப்பூர்வமாகத் திறப்பது, மைக்ரானின் உலகளாவிய உற்பத்தித் தடத்தை மேலும் வலுப்படுத்துகிறது. மேலும், எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தரமான தயாரிப்புகளைச் சரியான நேரத்தில், குறைந்த சுழற்சி நேரம் மற்றும் அதிகமான எண்ணிக்கையில் வழங்க உதவுகிறது” என்று அமர்ஜித் தனது உரையில் கூறினார்.
இந்தப் புதிய ஆலை திறப்பு விழா இந்த ஆண்டு மைக்ரானின் 45வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

மேலும், இன்வெஸ்ட்பினாங்கின் தலைமை செயல் அதிகாரி டத்தோ லூ லீ லியான், மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் (Mida) (முதலீட்டு மேம்பாடு) துணை தலைமை செயல் அதிகாரி லிம் பீ வியான் மற்றும் மைக்ரான் மெமரி மலேசியா இயக்குனர் இராமமூர்த்தி கணபதி ஐயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மைக்ரான் நிறுவனம் பினாங்கில் உள்ள தனது நிறுவனத்தின் மேம்பாட்டுக்காக 1 பில்லியன் அமெரிக்கா டாலர் முதலீடுச் செய்துள்ளதாகவும், அடுத்த சில ஆண்டுகளில் பினாங்கில் இந்தப் புதிய மேம்பாட்டின் கட்டுமானம் மற்றும் முழு உபகரணங்களைச் சேர்த்து மொத்தமாக 1.5 மில்லியன் சதுர அடி தொழிற்சாலையாக அதன் இடத்தை விரிவாக்கம் செய்ய கூடுதலான 1 பில்லியன் முதலீடுச் செய்யப்படும் என்றும் அமர்ஜித் கூறினார்.

 

இந்தப் புதிய மேம்பாட்டின் செயல்பாடுகள், 2050-க்குள் பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கும், 2030-க்குள் நிலப்பரப்புகளில் அபாயகரமான கழிவுகளைப் பூஜ்ஜியமாக்குவதற்கும் மைக்ரான் நிறுவனம் ஆதரிக்கும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், இந்தப் புதிய ஸ்மார்ட் உற்பத்தி மேம்பாடு, பத்து காவானில் உள்ள மைக்ரானின் தளத்தின் விரிவாக்கம் ஆகும். இது முன்னணி தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான மாநில சுற்றுச்சூழல் அமைப்பின் மீது மைக்ரான் நிறுவனம் கொண்ட நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.

“எனவே, இது பினாங்கின் குறைக்கடத்தி துறையின் தலைமைத்துவத்தை மேலும் பாதுகாக்கவும் வலுப்படுத்தவும் ஊக்குவிக்கிறது.
“மைக்ரான் இந்த ஆண்டு 45வது ஆண்டு விழாவைக் குறிக்கும் நிலையில், பினாங்கில் மைக்ரான் நிறுவனத்தின் ஐந்தாண்டு சாதனையையும் நாங்கள் கொண்டாடுகிறோம் என்பதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 

“இந்த விரிவாக்கம், அதிநவீன குறைக்கடத்தி உற்பத்திக்கான மையமாக பினாங்கு திகழ்கிறது.
“பொருளாதார வளர்ச்சியில் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த டிஜிட்டல் சகாப்தத்தில் நாம் முன்னேறும்போது, கண்டுபிடிப்பு, நிலைத்தன்மை மற்றும் கூட்டு செழிப்பை மேம்படுத்த மைக்ரான் போன்ற தொழில்துறை தலைவர்களுடன் தொடர்ந்து ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.

தேசிய அளவிலான போட்டித்தன்மையை மேம்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும் அதேவேளையில், எதிர்கால வேலைகளை உருவாக்கும் பிரதான முதலீடுகளைச் செயல்படுத்துவதில் Mida மற்றும் இன்வெஸ்ட்பினாங்கின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு சாவ் நன்றித் தெரிவித்தார்.
“பினாங்கு மாநிலத்தின் சமூகம் மற்றும் முதலீட்டாளர்களுக்கு தொடர்ச்சியான வணிக வாய்ப்பு மற்றும் தடையற்ற செயல்பாடுகளை உறுதி செய்ய அயராது உழைக்கும் பிற தொடர்புடைய மாநில அரசு நிறுவனங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“மீண்டும் ஒருமுறை, பாராட்டத்தக்க சாதனைக்காக மைக்ரான் நிறுவனத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மைக்ரான் நிறுவனத்துடனான தொடர் கூட்டாண்மையை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன். அதே வேளையில், பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கான முன்முயற்சிகளுடன் பினாங்கு மாநிலம் முன்னெடுத்துச் செல்லும்,” என சாவ் கூறினார்.