வரலாறு காணாத வெள்ளப் பேரிடரால் கிழக்குக்கரையோர மாநிலங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பேரிடரால் பல்லாயிரக்கணக்கானப் பொது மக்கள் துயர் துடைப்பு மையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த ராட்சத வெள்ளத்தில் குறிப்பாக கிளந்தான், திரங்காணு, பஹாங், பேரா, ஜோகூர், கெடா ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளத்தில் மிகவும் மோசமாக கிளந்தான் மாநில குவா மூவாங் வட்டாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கூட்டரசு அரசாங்கம் மட்டுமின்றி மக்கள் கூட்டணி அரசாங்கமும் உதவிக்கரம் நீட்டி வருவது குறிப்பிடத்தக்கதாகும். அவ்வகையில் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசியல் தலைவர்கள் குறிப்பாக ஆட்சிக்குழு உறுப்பினர்களான சாவ் கொன் யாவ், பீ புன் போ, பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு மற்றும் பல தலைவர்கள் நேரடியாகக் கிளந்தான் மாநிலத்திற்குச் சென்று பொது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினர்.
மேலும், இந்த வெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் வீடு மற்றும் உடமைகளை இழந்து பரிதவிக்கின்றனர். ஆதரவற்ற நிலையில் இருக்கும் பொது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு ரிம1.5 மில்லியன் வழங்கியது சாலச்சிறந்ததாகும். இந்த வெள்ளப் பேரிடர் நிகழும் தருணத்தில் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் மலேசியாவில் இல்லாவிட்டாலும் மக்களின் நிலைமையை அறிந்த தருணத்திலே உடனடி உதவித்தொகை வழங்குமாறு பணித்தார் எனக் குறிப்பிட்டார் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய பீ புன் போ.
மேலும் கிளந்தான் மக்களுக்கு அடிப்படைப் பொருட்களை வழங்குவதற்கு பினாங்கு மாநில அரசு உட்பட பினாங்கு மக்கள், அரசு இலாக்கா, அரசு சாரா இயக்கங்கள், அரசு அமைப்புகள் என்று அனைவரும் உதவிப்புரிந்தனர். மாநில அரசுடன் செபெராங் பிறை நகராண்மைக் கழகமும் இணைந்து 7 கனரக வாகனங்களில் 15 டன் எடைக் கொண்ட அடிப்படைப் பொருட்கள் கிளாந்தான் மாநிலத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தண்ணீர் போத்தல்கள், ஆடைகள், உணவுப்பொருட்கள் மற்றும் பல அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. வழிப்பாட்டுத் தளங்கள் மூலம் ஏறக்குறைய ரிம100,000 நிதித் திரட்டப்பட்டது. அந்த நிதிக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையானப் பொருட்கள் வாங்கப்பட்டதாக செபெராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பிப்பினர் சுல்கிப்லி இப்ராஹிம் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் இந்த உன்னத நாளில் அனைத்து செபெராங் பிறை நகராண்மைக் கழக உறுப்பினர்களும் தங்களின் தொண்டு ஆற்றினர் என்பது சாலச் சிறந்தது.
அதுமட்டுமின்றி, மாநில அரசு சார்பிலும் பல கனரக வாகனங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அடிப்படைப் பொருட்கள் அனுப்பப்பட்டன. இந்தத் தொண்டுப் பணியில் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 2015-ஆம் ஆண்டு புத்தாண்டுத் தொடக்கமாக மாநில அரசின் சார்பில் 31/12/2014-ஆம் நாள் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்பட்டு 1/1/2015-ஆம் நாள் கிளாந்தான் மாநில குவால கிராய் மாவட்டத்தைச் சென்றடைந்தனர். இதனை அதிகாரப்பீர்வமாகத் தொடக்கி வைத்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.தொடக்கத்தில் பொதுநல, சமூக பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரான மதிப்பிற்குரிய பீ புன் போ தலைமையில் 8 தன்னார்வாளர்கள் படையுடன் கோத்தா பாரு நாடாளுமன்ற பகுதி மக்களுக்குத் தேவையானப் பொருட்கள் விமான மூலம் அனுப்பப்பட்டது. பினாங்கு மாநில சுற்றுலா மற்றும் மலாய் மரபு கழகம் “SAHABAT” , தன்னார்வ தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அணி ஏற்பாட்டிலும் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்படும் அரசு சாரா இயக்கங்களின் முயற்சியினைப் பாராட்டினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);