ரெலாவ் விளையாட்டு மையம் அடிக்கல் நாட்டு விழா

படம் 2: அனைத்துலக ரீதியில் அமைக்கப்படவிருக்கும் நீச்சல் குளம்
படம் 2: அனைத்துலக ரீதியில் அமைக்கப்படவிருக்கும் நீச்சல் குளம்

பினாங்கு மாநகர் கழகத்தின் ஏற்பாட்டில் ரெலாவ் விளையாட்டு மையம் அடிக்கல் நாட்டு விழா இனிதே நடைபெற்றது. இதனை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மாநில முதல்வர் இவ்விளையாட்டு மையத்தில் அமைக்கப்படவிருக்கும் நீச்சல் குளம் அனைத்துலக ரீதியில் அனைத்து பொது வசதிகளுடன் இருப்பதாக வர்ணித்தார். 2.17 ஏக்கர் நிலப்பரப்பில் இக்கட்டுமானம் தொடங்கியது. இது 20 மாத காலக்கட்டத்தில் ரிம21.4 கோடி பொருட்செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்காக திறந்த குத்தகை முறையில் ஃபொகஸ் முர்னி சென்.பெர்ஹாட் நிறுவனம் தேர்வாகியது குறிப்பிடத்தக்கதாகும்.

அனைத்துலக ரீதியில் அமைக்கப்படவிருக்கும் ரெலாவ் விளையாட்டு தளங்கள்
அனைத்துலக ரீதியில் அமைக்கப்படவிருக்கும் ரெலாவ் விளையாட்டு தளங்கள்

ரெலாவ் விளையாட்டு மையம் நிர்மாணிப்பதன் வழி பினாங்கு வாழ் இளையோர் முதல் முதியவர் வரை ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை அமல்படுத்த ஏதுவாக அமையும் என்றார். இந்த விளையாட்டு மையம் நவீன வசதிகள் கொண்ட ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளம், ஒரு டைவிங் குளம்”, 10 பூப்பந்து விளையாட்டு வளாகம், உணவு விடுதி, கடைகள், உடற்பயிற்சிக் கூடம், வாகன நிறுத்துமிடம் மற்றும் இதர வசதிகளுடன் நிறுவப்படும். இந்தப் பிரமாண்டமான விளையாட்டு மையத் திட்டத்தை அமல்படுத்தும் மாநகர் தலைவர் டத்தோ பத்தாயா மிந்தி இஸ்மாயில் மற்றும் பினாங்கு மாநகர் கழக உறுப்பினர்கள் அனைவரையும் பாராட்டினார். இதனிடையே, இத்திட்டம் பசுமைக் கட்டிடம் குறியீட்டு ஒருங்கிணைப்பாளர் (green building index facilitator) துணையின்றி பினாங்கு மாநகர் கழக வடிவமைப்பின் கண்காணிப்பில் நடத்தப்படவுள்ளது பாராட்டக்குறியதாகும். இது பினாங்கு மாநகர் மன்றம் அனைத்துலக அளவிலானப் பொதுத் திட்டங்களைச் செயல்படுத்த சொந்த நிபுணத்துவத்தைப் பெற்றிருப்பதைச் சித்தரிக்கின்றது.

}