பினாங்கு ஜார்ச்டவுன் பாரம்பரிய நிறுவன ஏற்பாட்டில் “லிட்டல் இந்தியா ஜார்ச்டவுன்” கையேடு வெளியீட்டு விழாக் கண்டது. இந்த கையேடு சரித்திரம் புகழ்ப்பெற்ற ஜார்ச்டவுன் தளத்தில் இடம்பெற்ற பல கலை கலாச்சாரத்தை மற்றும் பாரம்பரியத்தைச் சித்தரிக்கிறது. எழுத்தாளரும் நிருபருமான ஹிமான்ஷு பாட் அவர்களின் கைவண்ணத்தில் வெளியீடு கண்ட ஆங்கில நூலின் மொழிப்பெயர்ப்பே இந்த கையேடாகும். மதம், இன, மொழி என்ற பாகுபாடின்றி பினாங்கு வாழ் மக்கள் யுனேஸ்கோ பாராம்பரிய தள தினத்தை மிக கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். ஜார்ச்டவுன் உலக பாரம்பரிய தளத்தில் “லிட்டல் இந்தயா” என்றாலே இந்தியர் சமூகத்தைக் குறிக்கும் என்றார் உள்ளூர் அரசு, போக்குவரத்து மேலாண்மை மற்றும் வெள்ள நிவாரண ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ். இந்த இடத்தில் இந்தியர்களின் பாரம்பரிய ஆடைகள், உணவகங்கள், மளிகை கடைகள், நகைக் கடைகள் எனப் பல வணிக கடைகள் இடம்பெற்றுள்ளன.
19-ஆம் நூற்றாண்டில் தென் இந்தியாவை சார்ந்த தொழிலாளிகள் பினாங்கு மாநிலத்திற்குப் புலம்பெயர்ந்ததைத் தொடர்ந்து லிட்டல் இந்தியா உருவாக்கம் கண்டது. இந்த கையேடு வெளியீட்டு விழாவின் மூலம் உலக அரங்கில் பினாங்கு மாநில லிட்டல் இந்தியா புகழ் பரவும் என்றார். 347 பக்கங்கள் கொண்ட இந்த கையேட்டிற்கு “ஜார்ச்டவுன் லிட்டல் இந்தியா” என்ற தலைப்பு சூட்டப்பட்டது. இந்த கையேடு வெளியீட்டு விழாவை அதிகாரபூர்வமாகத் துவக்கி வைப்பதில் அகம் மகிழ்வதாக கூறினார் ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ்.
2010-ஆம் ஆண்டு பினாங்கு மாநில அரசு துணையுடன் பினாங்கு ஜார்ச்டவுன் பாரம்பரிய நிறுவனம் அமைக்கப்பட்டு அத்தளத்தில் கலை, கலாச்சாரம், பாரம்பரியம், பாதுகாக்கப்படுவதோடு மேம்படுத்தப்படுகிறது எனப் புகழாரம் சூட்டினார். மேலும், லிட்டல் இந்தியா பகுதியில் பல தலைமுறையாக இடம்பெற்றுள்ள வணிக கடைகளுக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் சாவ் கொன் யாவ் அனைவருக்கும் கையேடுகளை வழங்கி சிறப்பித்தார். மேலும், பொது மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்து கூறினார்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);