- ஜார்ச்டவுன் – பினாங்கு லிட்டல் இந்தியா தலத்தின் நுழைவாயில் நிர்மாணிப்புப் பணிகள் இந்த ஆண்டு ஜுலை மாதம் தொடங்கப்பட்டு நவம்பர் மாதம் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
“பினாங்கு மாநகர் கழகம் இந்த நுழைவாயிலுக்கானக் கட்டடமைப்புப் புரனாய்வுப் பணிகளை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நுழைவாயில் முடிந்த வரையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் கொண்டாடப்படும் தீபாவளிக் கொண்டாடத்திற்கு முன்னதாக நிறைவுப்பெற்றால் வருகையாளர்களை மிகவும் கவரும்,” என பினாங்கு லிட்டல் இந்தியா நுழைவாயில் மேம்பாட்டுப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட போது பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ் இவ்வாறு குறிப்பிட்டார்.
பீச் ஸ்ட்ரீட் மற்றும் மார்க்கெட் ஸ்ட்ரீட் சாலைக்கு இடையில் பிரமாண்டமான நுழைவாயில் நிர்மாணிக்கும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்திய மற்றும் இஸ்லாமிய கலை அம்சங்களை கொண்டு இந்த பிரமாண்ட நுழைவாயில் வடிவமைக்கப்பட்டுள்ளது, பாராட்டக்குரியதாகும்.
-
இதற்கிடையில், இப்பகுதியில் வெள்ள நிவாரணத் திட்டமான வடிக்கால் மற்றும் சாலை மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது. லிட்டல் இந்தியாவிற்கு வருகையளிக்கும் வருகையாளரின் பாதுகாப்புக்கும் வசதிக்கும் உதவும் வகையில் வடிக்கால் மற்றும் சாலை மேம்படுத்தும் திட்டத்தில் பாதசாரி நடைப்பாதையும் எம்.பி.பி.பி நிர்மாணித்துள்ளது.
இதற்காக மாநில அரசு
ரிம450, 555 நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ள வேளையில் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு ஐந்து மாதங்களில் வடிக்கால் மற்றும் சாலை மேம்பாட்டுத் திட்டம் நிறைவடைந்துள்ளதை எம்.பி.பி.பி செயலாளர் இரஜேந்திரன் லிட்டல் இந்தியா மேம்பாட்டுத் திட்டம் விளக்கக்கூட்டத்தில் விவரித்தார்.பினாங்கு நம்பிக்கை கூட்டணி அரசு 2018 ஆம் ஆண்டின் தேர்தல் வாக்குறுதிகளில் இந்த பிரமிக்க வைக்கும் லிட்டல் இந்தியா நுழைவாயிலும் அதில் அடங்கும்.
-
இந்நிகழ்ச்சியில் கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹெங், பெங்காலான் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் கூய் சீ சென், எம்.பி.பி.பி பிரதிநிதிகள், பினாங்கு வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.