லிட்டில் இந்தியாவில் வர்த்தகர்கள் சி.எம்.சி.ஓ அமலாக்கத்தினால் வியாபாரித்தில் பெரும் பாதிப்பை எதிர்நோக்குகின்றனர்.

Admin
கலையிலந்து காணப்படும் பினாங்கு லிட்டல் இந்தியா தீபாவளி கொண்டாட்டம்

ஜார்டவுனில் உள்ள லிட்டில் இந்தியாவில் தீபாவளிக்கு கடைசி நிமிட பொருட்கள் வாங்குவதை விட இந்தியர்களுக்கு உற்சாகம் எதுவும் இருக்க முடியாது. எனினும், இந்த ஆண்டு இச்சூழலில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மாயா துணிக்கடை உரிமையாளர் கே.ராஜேந்தர், 68, இன்று முதல் டிசம்பர் 6 வரை மீண்டும் அமல்படுத்தப்பட்ட நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (சி.எம்.சி.ஓ) தொடர்ந்து, இந்த அறிவிப்பு அவரது வணிகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

மாயா துணிக்கடை உரிமையாளர் இராஜேந்தர்

“பண்டிகைக் கொண்டாட்டத்திற்கு சில நாட்கள் முன்பு தான் வணிகங்களுக்கு மிக முக்கியமான காலக்கட்டம், ஏனென்றால் கடைசி நிமிட வியாபாரத்தின் மூலம் வியாபாரிகள் கூடுதல் பொருட்களை விற்கக்கூடும். அதே வேளையில், கூடுதல் இலாபமும் பெற வித்திடும்.

“தீவில் இருந்து மட்டுமல்லாமல், பெருநிலத்தில் மற்றும் பிற மாநிலங்களிலும் குறிப்பாக கெடாவிருந்தும் வாடிக்கையாளர்கள் லிட்டல் இந்தியாவிற்கு ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும் வருகையளித்து பொருட்களை வாங்கிச் செல்வர். சி.எம்.சி.ஓ காரணமாக அவர்கள் தற்போது இத்தளத்திற்கு இறுதி நேரத்தில் பொருட்கள் வாங்க வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

“இதனால், எங்களால் இறக்குமதி செய்யப்பட்ட துணிகள் விற்க முடியாமல் நிச்சயமாக பணப் பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, நாங்கள் விநியோகிப்பாளர்களுக்கு இன்னும் கூடுதல் பணம் செலுத்த வேண்டியுள்ளது. இருப்பினும் கோவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தை எதிர்கொள்ள தான் வேண்டும்.

“இது எனக்கு மட்டுமல்ல, மற்ற வர்த்தகர்களுக்கும் நிச்சயமாக கடினமானத் தருணம்,” என்று முத்துச் செய்திகள் நாளிதழ் நிருபருக்கு அளித்தப் பேட்டியில் இராஜேந்தர் இவ்வாறு கூறினார்.

ராஜேந்தரின் கூற்றுப்படி, சி.எம்.சி.ஓ அமல்படுத்தப்படுவதற்கு முன்னரும், வணிகம் பாதிக்கப்பட்டது, இப்போது அது மோசமாகிவிட்டது, என வருத்தத்துடன் கூறினார்.

“நேற்றைய நிலவரப்படி, எங்களுக்கு இன்னும் வாடிக்கையாளர்கள் இருந்தனர், ஆனால் முந்தைய ஆண்டுகள் போன்று இவ்வாண்டு இல்லை. தொற்றுநோய் உண்மையில் பொருளாதார ரீதியாக நம்மை பாதித்துள்ளது.

“ஒருவேளை, 2021 ஆம் ஆண்டில் நேரம் சிறப்பாக இருக்கும் என நம்பிக்கையுடன் இருக்க முயற்சிக்கிறேன்; தற்போதைய நிலைமை மாற்றமடைய நாங்கள் காத்திருக்க வேண்டும்,” என்றார்.

இதேபோன்ற அவலநிலையைப் பகிர்ந்துகொண்டு, தீபாவளி பலகாரம் விற்கும் பருவகால வர்த்தகர் எம். அன்புகரசன், 33, தற்போதைய சூழ்நிலை சாதகமாக இல்லாமல் இருள் சூழ்ந்திருந்தாலும், வியாபாரத்தில் முன்னேற்றம் காண முடியும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.

பலகார கடை வியாபாரி மோ.அன்புகரசன்

“எனது பலகார முதலீட்டைப் பற்றி நினைக்கும் போது மிகவும் பயமாக இருக்கிறது. என்னால் அப்பொருட்களை எனது விநியோகிப்பாளரிடம் திருப்பித் தர முடியாது, அவற்றை விற்க நான் கடுமையாக முயற்சிக்க வேண்டும்.

“கோரணி நச்சு தொற்றுநோயின் தாக்கத்தால் அச்சம் ஏற்பட்டு பொது மக்கள் வெளியே அதிகமாக நடமாடுவதைக் குறைத்துள்ளனர்.
இப்போது சாலைத் தடைகளால், லிட்டில் இந்தியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையிலும் பெரும் சரிவுக் கண்டுள்ளது.

“நாங்கள் பெரியவர்களாக இருந்தாலும் சிறியவர்களாக இருந்தாலும் சரி, எல்லோரும் இப்போது சி.எம்.சி.ஓ காரணமாக பாதிப்பை உணர்கிறார்கள்.

“ஒரு பண்டிகை விற்பனையின் உச்ச காலம் எப்போதுமே இறுதி வாரமாகும், இங்கு நாங்கள் மந்தமான சூழலில் இருக்கிறோம்,” என்றார் அன்புகரசன்.

கோவிட்-19 வழக்குகள் அதிகரித்துள்ள நிலையில், சி.எம்.சி.ஓ விதிக்கப்பட்டிருப்பதும் சிறந்த அணுகுமுறையாக இருந்தாலும், இந்த காலக்கட்டத்தில் வியாபாரிகளின் நிலைமையும் கொஞ்சம் கருத்தில் கொண்டு செயல்பட்டிருக்கலாம், என்றார்.

“தீபாவளியின் போது வர்த்தகர்களை பாதிக்காத வகையில் மத்திய அரசு சில உத்திகளை முன்கூட்டியே திட்டமிட்டிருக்கலாம்.

“ஒரு கொண்டாட்டத்தை விட பொது சுகாதாரமும் பாதுகாப்பும் மிக முக்கியமானது என்று நானும் நம்புகிறேன், ஆனால் சி.எம்.சி.ஓ திடீரென அறிவிக்கப்பட்டது,” என்று அன்புகரசன் மேலும் கூறினார்.

இதற்கிடையில், தேவி என்று மட்டுமே அறிய விரும்பும் ‘டெவிஸ் மிக்சர்’ கடையின் உரிமையாளரான அவர் கோவிட்-19 வழக்குகள் அதிகரிப்பை தொடர்ந்து சி.எம்.சி.ஓ-வை எதிர்பார்த்ததாகக் கூறினார்.

“கோவிட்-19 வழக்குகள் தினமும் பதிவாகும் இடத்தைப் பற்றி தாதியாகப் பணிப்புரியும் எனது மக்கள் பகிர்ந்து கொள்வாள்.

இந்த ஆண்டு, ‘லட்டு’, சாக்லேட், ‘பால்கோவா’, ‘அதிராசம்’, ‘ஜிலேபி’, ‘பூந்தி’, ‘ஹல்வா’, ‘நீய் உருண்டே’, ‘ராவா உருண்டே’, மற்றும் பல குறைந்த அளவிலேயே விற்கிறேன் “என்று தேவி கூறினார்.

இந்த ஆண்டு இந்திய தின்பண்டங்களை விற்கும் தனது கடையை, முந்தைய ஆண்டுகளைப் போல் இரண்டு வாரங்கள் அல்லது ஒரு மாதத்திற்கு மேல் திறக்கப்படாமல், இம்முறை ஒரு வாரம் மட்டுமே திறந்திருக்கும் என்றும் தேவி கூறினார்.

கலையிலந்து காணப்படும் பினாங்கு லிட்டல் இந்தியா தீபாவளி கொண்டாட்டம்