லெபோ சுங்கை பினாங்கு,7 ஒன்பது பொது வசதிகளுடன் பொழுதுபோக்கு பூங்காவாக உருமாற்றம் காணும் – முதல்வர்

ஜார்ச்டவுன் – பொது மக்களிடையே ‘பொது வசதிகளை நேசிப்போம்’ என்ற மனப்பான்மை மேலொங்க வேண்டும். இதன் மூலம் பொது வசதிகள் பாதுகாக்கப்படுவதோடு பொது மக்களும் நிர்மாணிக்கப்படும் பொது வசதிகளை சிறந்த முறையில் பயன்படுத்த இயலும்.

மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் யாவ்
பினாங்கு, லெபோ சுங்கை பினாங்கு 7 ல், பொழுது போக்கு பூங்காவிற்கான பசுமை திட்ட அடிக்கல் நாட்டு விழாவை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்து இவ்வாறு தெரிவித்தார்.

பொதுவாகவே, மேம்பாட்டு நிறுவனங்கள் இந்த காலி நிலங்களை மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளும் பொருட்டு ஊராட்சி மன்றத்திடம் ஒப்படைக்கப்படும். எனவே, மாநில அரசு இந்த காலி இடங்களை சமூக நன்மைக்காக பொழுதுபோக்கு பூங்கா, சமூக மண்டபம், உடற்பயிற்சி மையம் என பொது வசதிகளை நிர்மாணிக்கும்.

வட கிழக்கு மாவட்டத்தில் இது வரை 69 பொழுதுபோக்கு பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளன, என்றார்.

மூன்று ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட இத்திட்டம் நகர்ப்புற பொழுதுபோக்கு பூங்காவாக அமைக்கப்படும்.

இத்திட்டத்தில் பினாங்கை சேர்ந்த ‘நடிர்’ ரக மரங்கள் நடுதல்; பூங்கா அமைத்தல்; மரங்களால் அமைக்கப்பட்ட நாற்காலி; திறந்த அரங்கம்; வனம் கருப்பொருப்ளை மையமாகக் கொண்ட வளாகம்; உடற்பயிற்சி மையம்; திடல்; வண்ணத்துப்பூச்சி பூங்கா என ஒன்பது பொது வசதிகளை உள்ளடக்கியுள்ளன.

இந்நிகழ்ச்சியில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் இராயர், ஆட்சிக்குழு உறுப்பினரும் பினாங்கு மாநில திறந்த வெளி & அரங்க வாரிய ஆணையருமான சூன் லிப் சீ மற்றும் சுங்கை பினாங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் சியூ கிம் கலந்து கொண்டனர்.

இந்த பசுமை திட்டம் 100 வாகன நிறுத்தும் இடங்கள் மற்றும் ஒன்பது பொது வசதிகளுடன் அடுத்த ஆண்டு (2021)ஜூலை மாதம் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.