செபராங் ஜெயாவில் ஐந்து நட்சத்திர தகுதிக்கொண்ட “டி லைட் தங்கும்விடுதி” (The Light Hotel) திறப்பு விழாக் கண்டது.
இதனை அதிகாரப்பூர்வமாக கடந்த 23 ஜனவரி 2015-ஆம் நாள் திறந்து வைத்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய மாநில முதல்வர் இந்த தங்கும்விடுதி பிரசித்திப்பெற்ற இடத்தில் அமைந்திருப்பதாகக் கூறினார். ஏனெனில், செபராங் பிறை வட்டாரத்தில் தங்கும் வசதிகள், கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்கள் ஏற்பாடுகளுக்குச் சிறந்த தளமாக லைட் தங்கும்விடுதி அமையும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
பினாங்கு மாநிலத்தை அனைத்துலக ரீதியில் வளமான மாநிலமாக மாற்ற எண்ணம் கொண்ட மக்கள் கூட்டணி அரசின் கனவை நினைவாக்கும் வகையில் இந்த ஐந்து நட்சத்திர தங்கும்விடுதி பெருநிலப்பகுதியில் அமைந்திருப்பதை எண்ணி அகம் மகிழ்ந்தார் மாநில முதல்வர். இந்த ஐந்து நட்சத்திர தங்கும்விடுதி ரிம120 லட்சம் செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இத்தங்கும்விடுதியின் வழி செபராங் பிறை வட்டாரம் சீக்கிரமாக பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
லைட் தங்கும்விடுதி 350,000 சதுரங்க நிலத்தில் 300 அறைகள், கருத்தரங்கு அறைகள், உணவகங்கள் மற்றும் பல அரிய வசதிகளுடன் அமைந்துள்ளது. நிகழ்வில் சிறப்புரையாற்றிய லைட் தங்கும்விடுதியின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ இரமேஸ் அவர்கள் பினாங்கு மாநிலத்தில் இந்த தங்கும்விடுதி அமைத்ததற்குப் பெருமிதம் அடைவதாகக் கூறினார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திச்செய்யும் வகையில் தங்களின் சேவைகள் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பினாங்கு டத்தோ ஸ்ரீ அருணாலம், தான் ஸ்ரீ டத்தோ டாக்டர் இராமசாமி மற்றும் இதர பிரமுகர்களும் கலந்து சிறப்புத்தனர்.