செபராங் ஜெயா – வழிபாட்டு தலங்களை உள்ளடக்கிய சந்திப்பு அமர்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் சமூகத்தில் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு இது சிறந்த அணுகுமுறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சமூக மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாத விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர், சோங் எங், அத்தகைய திட்டத்தை அமைப்பது பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலைப் பேணக்கூடிய ஒரு செயலுக்கான முயற்சியாகும்.
பினாங்கு ஹார்மனி கார்ப்பரேஷன் (HARMONICO) மற்றும் செபராங் ஜெயாவின் ஹார்மனி வழிப்பாட்டு தல ஸ்ட்ரீட்-ஐ உள்ளடக்கிய முழு ஒத்துழைப்பும் பல இன சமூகத்தினரிடையே இன ஒற்றுமை மற்றும் உறவுகளின் சமநிலையை வளர்ப்பதற்கான முன்முயற்சியின் ஒரு பகுதியாகும்.
“கூடுதலாக, இதைச் சுற்றியுள்ள பகுதி ஹர்மோனி தெரு என்று அழைக்கப்படுகிறது. இது அனைத்து முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத வழிபாட்டு தலங்களையும் சேர்த்து நல்லிணக்க மையமாக பயன்படுத்த மிகவும் பொருத்தமானது என்பதை மறுப்பதற்கில்லை,” என அருள்மிகு கருமாரியம்மன் கோயில் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, சோங் எங் இவ்வாறு கூறினார்.
மேலும், கு செங் சே கோயிலின் பிரதிநிதிகள்; அருள்மிகு ஸ்ரீ பால முருகன் திருக்கோயில்; ஸ்ரீ ராதா கிருஷ்ணர் கோவில்; பெனியல் கிறிஸ்டியன் பெல்லோஷிப்; செபராங் ஜெயா பௌத்த சங்கம்; குவாங் இன் கோயில்; அருள்மிகு கருமாரியம்மன் கோவில் மற்றும் செம்பிலாங் செபராங் ஜெயா மசூதி பிரதிநிதிகள் இந்த அமர்வில் கலந்து கொண்டனர்.
முன்னாள் பாடாங் லாலாங் சட்டமன்ற உறுப்பினருமான சோங் எங் அதே அமர்வில், Arts-ED ஏற்பாடு செய்யப்பட்ட கல்வித் திட்டத்தில் ஈடுபட்ட ஒன்பது வழிபாட்டு தலங்களுக்கு ‘ஹார்மனி பாயிண்ட்’ விருதை வழங்கி கெளரவித்தார். Arts-ED என்பது சமூக அடிப்படையிலான கல்வி, கலை மற்றும் கலாச்சாரத்தில் கவனம் செலுத்தும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
“பினாங்கைச் சுற்றியுள்ள பள்ளி மாணவர்களுக்கான கல்வித் திட்டம் ஒன்பது ஆலயங்கள் மற்றும் 12 பயிற்சியாளர்களை உள்ளடக்கிய Arts-ED உடன் இணைந்து நடத்தப்படவுள்ளது.
“இந்த பயிற்சியாளர்கள் முறையான பயிற்சி செயல்முறைகளைத் தவறாமல் மேற்கொணடவர்கள். மேலும், இளைஞர்கள் இது மீது கவனம் செலுத்துவதோடு, நல்லிணக்கம் மற்றும் Street of Harmony பின்னணி பற்றியும் அறிந்து கொள்ள விழிப்புணர்வு வழங்குகிறது.
“இதனால், பினாங்கு மாநிலக் கல்வி இலாகாவுடன் (JPNPP) இணைந்து ‘Jelajah Harmoni’ திட்டத்தை செயல்படுத்தவும், பள்ளி மட்டத்தில் இதனை தொடங்கவும் ஆலோசிப்பேன்,” என்று HARMONICO இன் தலைவராகவும் உள்ள அவர் மேலும் கூறினார்.
முன்னதாக, ஆலய பிரதிநிதிகள் முன் வைத்த போக்குவரத்து, வாகன நிறுத்தும் இடம் மற்றும் குப்பை சேகரிப்பு உள்ளிட்ட சில பிரச்சனைகள் குறித்து ஆட்சிக்குழு உறுப்பினர் கலந்து ஆலோசித்தார்.