பினாங்கு வாழ் 1,699 வாடகைக் கார் ஓட்டுனர்களுக்கு மாநில அரசு ஊக்கத்தொகை வழங்கியது. பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசாங்கம் வாடகைக் கார் ஓட்டுனர்களுக்கு தலா ரி.ம 300-ஐ வழங்கியது பாராட்டக்குறியதாகும் .இந்தச் சன்மானம் வழங்குவதற்காக மாநில அரசு ரி.ம 509,700 ஒதுக்கியது என மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் கூறினார். கடந்த 13-வது பொதுத்தேர்தலின் போது மக்கள் கூட்டணி அரசு தேர்தல் அறிக்கையில் சுற்றுலா துறையின் சேவை தரத்தை மேம்படுத்த வாடகைக் கார் ஓட்டுனர்களுக்கு ஒரு வருடத்திற்கு ரிம600 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து கடந்த 2013-ஆம் ஆண்டு தொடங்கி வழங்குகிறது.
இந்த ஆண்டுக்கான முதல் தவணை ஊக்கத்தொகை பிப்ரவரி மாதத்தில் ரிம300-ம் இரண்டாம் தவணை ஊக்கத்தொகை ஜூன் மாதத்திலும் வழங்கப்படும் என்று செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் அறிவித்தார். பினாங்கு வருகை ஆண்டு 2015-ஐ முன்னிட்டு வாடகைக் கார் ஓட்டுனர்கள் வாடிக்கையாளர்களிடம் பணிவாகவும் முக மலர்ச்சியுடனும் சேவை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் . வருகின்ற 2030-ஆம் ஆண்டு பொது போக்குவரத்து சேவையை 40% அதிகரிக்கும் பொருட்டு வாடகைக் கார் ஓட்டுனர்கள் தங்களின் சேவையை மேம்படுத்த வேண்டும் என மேலும் கூறினார்.
இந்த ஆண்டு பொது போக்குவரத்து ஆணையம் கீழ் பதிவுப்பெற்ற 1,699 வாடகைக் கார் ஓட்டுனர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டன . இதில் 1,317 பேர் தீவுப் பகுதி மற்றும் 382 பேர் பெருநிலப்பகுதியைச் சார்ந்த வாடகைக் கார் ஓட்டனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. .
இந்நிகழ்வில் முதலாம் துணை முதல்வர் டத்தோ ரஷிட் பின் ஹஸ்னோன், பினாங்கு விளையாட்டு மன்றம் மற்றும் இளைஞர், விளையாட்டு, மகளிர், குடும்பம் மற்றும் சமூகப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் சோங் எங், ஆட்சிக்குழு உறுப்பினர் அஃபீப் பஹாருடின் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
} else {