பத்து மாவுங் நெடுஞ்சாலைப் பகுதியில் இரண்டாவது பாலத்தின் இணைப்புச் சுவர் கடந்த 6 ஜூன்,2013-ல் இடிந்து விழுந்ததில் ஒரு கார் ஓட்டிநர் இடுபாடுக்களுக்கிடையே சிக்கிக் கொண்டு சம்பவ இடத்திலே மரணமுற்றார். அதேவேளையில் 13 ஜூன், 2013-ல் அம்னோ கட்டிட இடிதாங்கி சரிந்து விழுந்ததில் இருவர் மரணமுற்றனர் என்பதை அனைவரும் அறிவர். இரண்டு வாரங்களில் நடந்த இரண்டு கட்டமைப்பு தோல்விகளைத் தொடர்ந்து, உடனடி நடவடிக்கையாக மாநில அரசு பொது கட்டமைப்பு தோல்விகளைப் பற்றிய விசாரணைக் குழு ஒன்று நியமித்தது.
டத்தோ இயோ யாங் போ தலைமையில் அமைக்கப்பட்ட விசாரனைக் குழு 47 நாட்களில் 58 பேர் கொண்ட சாட்சியங்களை உட்படுத்திய அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அறிக்கையில் இடம்பெற்ற பரிந்துரைகள் மாநில ஆளுநர் துன் டத்தோ ஶ்ரீ உத்தாமா ஹாஜி அப்துல் ரஹ்மான் பின் ஹாஜி அப்பாஸ் அவர்களின் மேற்பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டு கடந்த 2 நவம்பர் 2015 முதல் பொது மக்களுக்கும் அதன் பரிந்துரைகள் வெளியிடப்பட்டது.
கடந்த 2013-ஆம் ஆண்டு ஏற்பட்ட இரண்டாவது பால இணைப்புச் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் மற்றும் அம்னோ கட்டிட இடிதாங்கி விழுந்த சம்பவம் குறித்த துணை விசாரனைக் குழுத் தலைவராககிராமம், நகரம் மற்றும் வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் சிங் மற்றும் அங்கத்தினராக 3 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இடம் பெறுகின்றனர். இக்குழுவினர் விசாரணைக் குழு வழங்கிய பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டதா என்பதை உறுப்படுத்த ஆயுத்தம் கொண்டுள்ளது. இரண்டு முறை சந்திப்புக் கூட்டம் நடத்தியதில் மலேசிய பொறியியலாளர் வாரியம் மற்றும் உள்ளூர் அரசு அமைப்புகள்(பினாங்கு மாநகர் கழகம், செபராங் பிறை நகராண்மைக் கழகம்) 2 வாரங்களில் துணை குழுவினருக்கு பரிந்துரை செயல்பாடு குறித்த முழு விபரம் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் திரு ஜெக்டிப்.