வி.வாசுதேவன் சுழற்கிண்ண காற்பந்து போட்டி 2015

மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.
மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.

பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற வி.வாசுதேவன் சுழற்கிண்ண காற்பந்து போட்டியில் 18 தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். 2-வது முறையாக நடைபெறும் இப்போட்டியில் 11 வயதுக்குக் கீழ்ப்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். காற்பந்து துறையில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் பொருட்டு இப்போட்டியில் பெண்களுக்கானப் பிரிவும் இடம்பெற்றது. இந்தப் பிரிவில் 7 குழுக்கள் கலந்து கொண்டு சாதனைப் படைத்தனர்.
மத்திய செபராங் பிறை காற்பந்து சங்கம் இந்திய இளைஞர்களைத் திரட்டி காற்பந்து துறையில் ஈடுபடுவதற்கு ஊந்துகோளாக அமைவதாகப் பாராட்டு தெரிவித்தார் மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி. 1970-ஆம் ஆண்டுகளில் அதிகமான இந்தியர்கள் விளையாட்டுத் துறையில் ஈடுபட்ட வேளையில் இன்றைய காலக்கட்டத்தில் இந்தியர்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டினார்.

வி.வாசுதேவன் சுழற்கிண்ண காற்பந்து போட்டியில் வெற்றிப் பெற்ற பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி குழுவினர்
வி.வாசுதேவன் சுழற்கிண்ண காற்பந்து போட்டியில் வெற்றிப் பெற்ற பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி குழுவினர்

செபராங் ஜெயா, சோனி திடல் அரங்கில் நடைபெற்ற வி.வாசுதேவன் போட்டியில் 27 குழுக்கள் கலந்து கொண்டனர். அதில் மூன்று குழுக்கள் சிறப்பு அழைப்பிதழ் மூலம் கலந்து கொண்டனர். இப்போடியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் மாநில இரண்டாம் துணை முதல்வர் சான்றிதழ் வழங்கி கொளரவித்தார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறப்பான ஆட்டத்தை வழங்கி ஆண்/ பெண் ஆகிய இரு பிரிவுகளுக்கான வெற்றி கேடயத்தையும் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தட்டிச் சென்றனர். ஆண்களுக்கான இரண்டாம் நிலை வெற்றிக் குழுவாக ஸ்டோ வெல் தேசிய பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டது. அதேவேளையில் பெண்களுக்கான இரண்டாம் நிலை வெற்றிக் குழுவாக திரான்ஸ்கிரியான் தமிழ்ப்பள்ளி இடம்பெற்றது