வி.வாசுதேவன் சுழற்கிண்ண காற்பந்து போட்டி 2018
பட்டர்வொர்த் – பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி இடையிலான 11 வயதிற்குட்பட்ட வி.வாசுதேவன் சுழற்கிண்ண காற்பந்து போட்டி ஐந்தாவது முறையாக கடந்த அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி செபராங் ஜெயா சோனி விளையாட்டு மைதானத்தில் இனிதே நடைபெற்றது.
இந்தச் சுழற்கிண்ண காற்பந்து போட்டி பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம், பினாங்கு மாநில காற்பந்து சங்கம், பினாங்கு இந்து சங்கம் மற்றும் மலேசிய தமிழர் குரல் சங்கத்தின் ஒத்துழைப்பில் நடைபெற்றதை பாராட்டினார் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி ராணி பட்டு.
தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே விளையாட்டுப் போட்டியில் ஆர்வத்தையும் திறமையையும் வெளிக்கொணர இப்போட்டி சிறந்த தளமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்ப்பள்ளி மாணவர்களையும் அனைத்துலக தரத்தில் சிறந்த போட்டியாளர்களாக உருவாக்க இம்மாதிரியான போட்டிகள் மையகல்லாக அமையும் என்பது பாராட்டக்குரியதாகும்.
இம்முறை பெண்களுக்கானக் காற்பந்து போட்டியை “பினாங்கு இந்து சங்க சுழற்கிண்ணம்” என பெயரிடப்பட்டுள்ளது.. பெண்கள் எதிலும் சலைத்தவர் அல்லர் என்பதை நிர்ணயிக்கும் வகையில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினர். இப்போட்டியில் கலந்து கொண்ட அனைத்து குழுவினருக்கும் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர் சான்றிதழ் எடுத்து வழங்கினார்.
மாணவர்கள் சிறப்பான ஆட்டத்தை வழங்கி ஆண் பிரிவில் ஸ்தோவல் தேசியப்பள்ளியும் பெண்களுக்கான பிரிவில் அல்மா தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் வெற்றி கேடயத்தையும் தட்டிச்சென்றனர்.