வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!!!

Admin

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை அடுத்து இந்துக்களால் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் சமயப் பண்டிகை தைப்பூசத் திருவிழாவாகும். 10 மில்லியன் பொருட்செலவில் புதிதாய் நிர்மாணிக்கப்பட்ட மிகப் பெரிய முருகன் ஆலயமான தண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயம் இவ்வாண்டு தைப்பூசத் திருவிழாவை மிக விமரிசையாகக் கொண்டாடவிருக்கிறது. இவ்வாண்டு தைப்பூசத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை வந்து மறுநாள் பொது விடுமுறையாக அமைவதால் ஏறக்குறைய 1 மில்லியன் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் திரளுவர் என எதிர்பார்ப்பதாக இரண்டாம் துணை முதல்வர் மாண்புமிகு பேராசிரியர் ப.இராமசாமி கூறினார்.

மேலும், அரசாங்க இலாக்காவான காவற்துறை, மருத்துவத் துறை, போக்குவரத்துத் துறை ஆகியோருடன் தாம் சந்திப்பு நடத்தி இத்தைப்பூசத் திருவிழா எந்தவொரு பிரச்சனையுமின்றி சிறப்பான முறையில் நடைபெற தாம் வழி வகுப்பதாக கூறினார். இவ்வாண்டு தைப்பூசத் திருவிழா புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் நடைபெறுவதில் தாம் பெருமிதம் அடைவதாக கோவில் தலைவர் திரு. குவணராஜு குறிப்பிட்டார். பக்தர்கள் தைப்பூசத் தினத்தன்று 27/1/2013 இரவு மணி 11.45-க்குள் தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், பக்தர்கள் சமயப் பண்பாட்டு நெறிகளுக்கு உட்பட்ட காவடிகளைச் செலுத்துமாறு தாழ்மையோடு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தேங்காய் அர்ச்சனை, பால் குடம், செம்பு, காவடி, முடி காணிக்கை ஆகியவற்றுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பதையும் தெளிவிறுத்தினார்.

தைப்பூசத்தன்று சுமார், 80 மருத்துவ அதிகாரிகள் ஆலய வளாகத்தில் மருத்துவச் சேவை வழங்குவர் என திரு குவணராஜு கூறினார். ஆலய கீழ்த் தளத்திலும், மேற்தளத்திலும் இரு மருத்துவ முகாம்கள் செயற்படும் என்றார். இம்மருத்துவச் சேவைகளை வழங்க பினாங்கு பொது மருத்துவமனையிலிருந்தும் செபெராங் ஜயா பொது மருத்துவமனையிலிருந்தும் மருத்துவர்கள் வரவழைக்கப்பட இருக்கின்றனர். இவர்களைத் தவிர்த்து தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்களும் உதவி செய்ய இருக்கின்றனர் என்றார் இவர்களைத் தவிர்த்து, 514 படிகளைக் கடந்து செல்லும் பக்தர்களுக்கு மருத்துவ உதவி செய்ய படிகளின் 8 நிலையங்களில் செயின் ஜோன் தன் ஆர்வலர்கள் பணியாற்றுவர். அதுமட்டுமல்லாது 5 மருத்துவ வண்டிகள் அவரசச் சிகிச்சைக்க்குத் தயார் நிலையில் நிறுத்தப்படும். மேலும், இவ்வாண்டு 137 பந்தல்கள் பதிவாகியுள்ளன எனத் தெர்வித்தார். அவற்றுள் பெரும்பாலான பந்தல்கள் உத்தாமா சாலையில் அமைந்துள்ளன. பந்தல்களில் உணவு மற்றும் பானம் வழங்குபவர்கள் பாலிஸ்டிரின் பொருட்களைத் தவிர்த்துப் பசுமைக்கு ஆதரவான பொருட்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பந்தல்களில் சமயம் சார்ந்த பாடல்களை ஒலியேற்றும்படியும் பொது மருத்துவமனைக்கு அருகில் உள்ள பந்தல்கள் ஒலி அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஆலய வளாகத்தில் மது அருந்துவதும் அதனை விற்பனைச் செய்வதும் மிக வன்மையாகக் கண்டிக்கப்படும் எனப் பேராசிரியர் ப.இராமசாமி குறிப்பிட்டார். சமயப் பண்டிகையான தைப்பூசத்தன்று பக்தர்கள் இறைச் சிந்தனையில் ஆழ்ந்து சமய நெறிகளுக்கு புறம்பான நடவடிக்கைகளைத் தவிர்த்துச் சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும் என்று பேராசிரியர் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டா

285672_523056781056353_1592567301_nதண்ணீர்மலை அருள்மிகு பாலதண்டாயுதபாணி முருகன் ஆலயம்