பினாங்கு கொடி மலையில் அமைந்துள்ள ஶ்ரீ அருளொளி திருமுருகன் ஆலயத்தில் 44-ஆம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. சுற்றுலாத் தளத்திற்கு புகழ்ப்பெற்று விளங்கும் கொடி மலையில் வீற்றுள்ள இந்த ஆலய ஆண்டு விழாவிற்குப் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுப்பயணிகளும் புற்றீசல் போல் திரண்டனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடிக் கார்த்திகை உற்சவ தினத்தன்று ஆண்டு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
ஶ்ரீ அருளொளி திருமுருகன் ஆலய திருவிழாவிற்குச் சிறப்பு பிரமுகராக மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் வருகையளித்தார். நாட்டில் அமைதி மற்றும் சுபிட்சம் நிறைந்திருப்பதற்கு இறைவனை வேண்டுவோம் என்றார் மாநில முதல்வர். மேலும், பொருள் சேவை வரி (ஜி.எஸ்.தி) செயல்முறையால் மக்கள் மட்டுமின்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது என்றார். மக்கள் பணம் மக்களுக்கே சொந்தமானதே தவிர அரசாங்கத்திற்கு அல்ல எனச் சூளுரைத்தார். அதுமட்டுமின்றி நமது நாட்டில் தொடர்ந்து ரிங்கிட் மதிப்பு சரிவுக் காண்கிறது. எனவே, மலேசிய மக்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா மேற்கொள்ள சிரமம் மேற்கொள்வதோடு பொருளாதாரமும் வீழ்ச்சிக் காண்கிறது எனப் பொது மக்களுக்கு எடுத்துரைத்தார்.
ஆலய ஆண்டு விழாவில் கலந்து கொண்ட மாநில முதல்வருக்குப் பொன்னாடை போற்றி மாலை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது. மாநில முதல்வர் இந்த ஆலய வளர்ச்சிக்குத் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டுவதாக உறுதியளித்தார். இந்த ஆலய சார்பில் உடல் நலம் பாதிக்கப்பட்ட திருமதி கோமதி மற்றும் நோர்டின் ஆகிய இருவருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டது. மாநில முதல்வர் தமது பொற்கரத்தால் உதவித்தொகை வழங்கியதோடு இந்த ஆலயத்தின் சமூக நலத் தொண்டைப் பாராட்டினார்.
ஆடிக்கார்த்திகை திருவிழா அன்று காலை மணி 9.30-க்கு கொடி மலை சம்மிட் ரோட்டிலிருந்து பக்த கொடிகள் புடைசூழ மேளவாத்தியங்களுடன் பால் குடங்கள் ஏந்தி திருமுருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் தொடர்ந்து இடம்பெற்ற பூஜையிலும் அன்னதானத்திலும் கலந்து கொண்டனர்.
படம் 1: மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் உடல் நலம் பாதிக்கப்பட்ட திருமதி கோமதியின் பிரதிநிதிக்கு உதவித்தொகை வழங்கினார்d.getElementsByTagName(‘head’)[0].appendChild(s);