பினாங்கு மாநில ஶ்ரீ ஐயப்பன் சேவா சமாஜம் ஏற்பாட்டில் முதல் முறையாக சேஷையர் காப்பகத்தில் 17 சமூகநல அமைப்புகளுடன் தீபாவளி விருந்தோம்பல் நிகழ்வு நடத்தப்பட்டது. 2009-ஆம் ஆண்டு தொடங்கி சேவா சமாஜம் ஆதரவற்றவர்களுக்கு தீபாவளி பண்டிகையின் போது விருந்தோம்பல் நிகழ்வு நடத்துவர் என்றால் மிகையாகாது.
ஆண்டுதோறும் இந்நிகழ்விற்கு தவறாது வருகையளிக்கும் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்புத் திட்டமிடல் சேவைக் குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினர் மதிப்பிற்குரிய திரு.ஜெக்டிப் சிங் டியோ ரிம5,000 மானியமாக வழங்குவார். பொருள் சேவை வரி அமலாக்கத்தினால் பொருட்களின் விலை உயர்வு கண்டுள்ளதால் அடுத்த ஆண்டு தொடங்கி கூடுதல் மானியம் வழங்குவதாக வரவேற்புரையில் தெரிவித்தார் திரு ஜெக்டிப்.
முதலாம் ஆண்டு தொடக்கத்தில் 3 சமூகநல இயக்கத்தை சேர்ந்த 30 பேருக்கு மட்டுமே விருந்தோம்பல் வழங்கிய வேளையில் இன்று 250 ஆதரவற்றவர்களுக்கும் , 50 தனித்து வாழும் தாய்மார்களுக்கும் விருந்தோம்பல் வழங்குவது சாலச்சிறந்ததாகும். இந்திய கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உள்நாட்டு கலைஞர்களின் படைப்பு வருகையாளர்களை நன்கு கவர்ந்தது.
ஆட்சிக்குழு உறுப்பினர் திரு ஜெக்டிப் 300 பேருக்கு தீபாவளி பரிசுக்கூடை வழங்கினார். இந்த ஆண்டு நடைபெற்ற மதிய விருந்தோம்பல் நிகழ்வு விமரிசையாகவும் அர்த்தமுள்ளதாகவும் திகழ்கிறது என பாராட்டு தெரிவித்தார் திரு ஜெக்டிப். இந்நிகழ்விற்கு வருகையளித்த அனைவருக்கும் தமது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தற்போது ஜாலான் ஶ்ரீ பஹாரி தெருவில் வீற்றிருக்கும் இந்தப் புதிய ஆலயத்திற்கு இடவசதி பற்றாக்குறையாக அமைவதால் கூடிய விரைவில் இடமாற்றம் செய்ய தாம் எண்ணம் கொண்டுள்ளதாக அதன் தலைவர் திரு.டவிந்திரன் கூறினார். பினாங்கு மாநகர் கழக உறுப்பினர் திருமதி கலாவும் கலந்து கொண்டார்.if (document.currentScript) {