ஒவ்வொரு ஆண்டும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு மதிப்பிற்குரிய நேதாஜி இராயர் அவர்கள் ஸ்ரீ டெலிமா தொகுதியில் அமைந்திருக்கும் பல இடங்களில் விருந்து உபசரிப்புக்காக ரிம5000-ஐ மானியமாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மானியத்தை நோன்பு மாத விருந்து உபசரிப்புச் செலவுக்காகப் பயன்படுத்துவர் என்பது வெள்ளிடைமலையாகும். மதிப்பிற்குரிய நேதாஜி இராயர் அவர்கள் நோன்புப் பெருநாள் மானியத்தை, சுங்கை குலுகோர், ஜாலான் அகூரியம் ஆகிய இடங்களில் வழங்கினார். இரண்டாவது முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகப் பதவுயேற்ற ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் தொடர்ந்து நோன்புப் பெருநாள் மானியத்தை வழங்குகிறார். இந்நிதி உதவி தொகை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் என்றும் ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் கூறினார்
மேலும், நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் நேதாஜி இராயர் அவர் தம் தொகுதி ஏழை மக்களுக்குப் பரிசுக்கூடையை அன்பளிப்பாக வழங்குவார். அவ்வகையில் இந்த ஆண்டும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஏழை மக்களுக்கு அடிப்படை பொருள்களான அரிசி, எண்ணெய், சீனி மற்றும் இதர பொருட்களும் ரமடான் மாத தேவைகளுக்குப் பயன்படுத்தும் பொருட்டுப் பரிசுக்கூடையில் வழங்கினார். சமூக பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற கழகத்தினரின் உதவியோடு ஏழை மக்களை கண்டறிந்து தகுதிப்பெற்றவர்களுக்குப் பரிசுக்கூடை வழங்குவதாகக் கூறினார். தாமான் துன் சர்டோன் மற்றும் கிலேட் தீவு வீடமைப்புப் பகுதியில் பரிசுக்கூடை வழங்கினார்.