பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு 1998-ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்ட மெஜஸ்டிக் ஹைட்ஸ் திட்டத்தின் இரண்டாம் கட்ட 2A வீடமைப்புத் திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் வழங்கியது. பிஎல்பி செண்டிரியன் பெர்ஹாட்(PLB Sdn Bhd) எனும் மேம்பாட்டு நிறுவனம் கைவிடப்பட்ட இந்த வீடமைப்புத் திட்டத்தை பூர்த்திச் செய்வதற்கு ஒப்புதல் வழங்கியது பாராட்டக்குறியதாகும். இந்த இரண்டாம் கட்ட 2A வீடமைப்புத் திட்டத்தில் 370 பேர் வீடுகள் வாங்கியுள்ளனர் .
கிநாய்ட் நிறுவனத்தின் (knight company) துணை நிறுவனமான பிஎல்பி செண்டிரியன் பெர்ஹாட்(PLB Sdn Bhd) இந்த மீட்புத் திட்டத்தை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. எனவே இத்திட்டத்தில் வீடு வாங்குநருடன் மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்த உடன்படுக்கையில் கையொப்பமிட ஒப்புதல் கொண்டது.
இந்த மீட்புத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கும் வீட்டு வாங்குநர்கள் வழக்குரைஞர் கட்டணமாக ரிம10,000 செலுத்த வேண்டும் . தொடக்கத்தில் இந்த வழக்குரைஞர் கட்டணம் ரிம45,000 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் மாநில அரசு மக்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு கட்டணத்தை குறைக்க துணை புரிந்துள்ளது என மாநில முதல்வர் தெரிவித்தார் . இந்த இரண்டாம் கட்ட 2A மீட்புத் திட்டத்தை மேற்கொள்வதற்கு ரிம17மில்லியன் செலவிடப்படும் என்றார்.
இந்த இரண்டாம் கட்ட 2A மீட்புத் திட்டத்தைத் தொடங்குவதற்கு வீடு வாங்குநர்களில் குறைந்தபட்சம் 220 பேர் மேம்பாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்த உடன்படுக்கையில் கையொப்பமிட வேண்டும். இதுவரை 127 வீடு வாங்குநர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். மேலும் 93 வீடு வாங்குநர்கள் ஒப்பந்த உடன்படுக்கையில் கையொப்பமிட்டால் தான் இத்திட்டம் தொடங்க முடியும் என எடுத்துரைத்தார் மாநில முதல்வர்.
எனவே வீடு வாங்குநர்கள் உடனடியாக கொம்தாரில் அமைந்துள்ள சாலினா, லிம் கிம் சிவான் என்ற வழக்குரைஞர் அலுவலத்திற்குச் சென்று ஒப்பந்ததில் கையெழுத்திட அழைக்கப்படுகின்றனர். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மெஜஸ்டிக் ஹைட்ஸ் திட்டத்தின் 2B, 3A பகுதிகளில் வீடுகள் வாங்கியவர்களும் வழக்குரைஞர் அலுவலகத்தில் பதிவுச்செய்யுமாறு கேட்டுக்கொண்டார் கிராமம், நகரம் மற்றும் வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினரான திரு ஜெக்டிப் சிங் டியோ .கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களை அடையாளங்கண்டு பொது மக்களுக்குச் சொந்த வீடுகள் வாங்க மாநில தூண்டுகோளாக விளங்கும் என்றார்.