14.5.2023
ஊடக வெளியீடு
மேதகு சாவ் கொன் இயோவ்
பினாங்கு மாநில முதலமைச்சர்
“நீட்டிக்கப்படும்” ஆயர் ஈத்தாம் அணையின் மூல நீர் இருப்பு இன்னும் 120 நாட்களுக்கு நீடிக்கும்
129 நாட்களில், இந்த அணையின் நீர்மட்டம் 41.4% குறைந்துள்ளது. 1.1.2023 அன்று 82.5% ஆக இருந்த அணையின் நீர்மட்டம் 9.5.2023 அன்று 41.1% ஆக குறைந்துள்ளது. எனவே, மீதமுள்ள 41.1% நீர்மட்டம் இன்னும் 120 நாட்களுக்கு நீடிக்கும்.
பினாங்கு, ஞாயிறு, 14.5.2023: பினாங்கு முதலமைச்சர் என்ற முறையில், பினாங்கு நீர் விநியோக வாரியத்திடம், ஆயர் ஈத்தாம் அணையின் இருப்புக்கள் அடுத்த செப்டம்பர் மாத மழைக்காலம் வரை போதுமான நீர் விநியோகத்தை உறுதி செய்ய செயல்திட்டங்களை மறுசீரமைப்புச் செய்யுமாறு உத்தரவிடுகிறேன்.
பின்வரும் 4 முக்கிய காரணங்களால் PBAPP இதனைச் செயல்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன்:
இந்த ஆண்டு, 1.1.2023 முதல் 9.5.2023 வரை அதாவது 129 நாட்களுக்குள் ஆயர் ஈத்தாம் அணையின் நீர்மட்டம் 41.4% குறைந்துள்ளது. 9.5.2023 அன்று, அதன் செயல்திறன் 41.1% ஆக இருந்தது, இது 2023, செப்டம்பர் மாதத்தில் எதிர்பார்க்கப்படும் மழைக்காலம் வரை இன்னும் 120 நாட்களுக்கு நீடிக்கும்.
9.5.2023 அன்று, METMalaysia வெளியிட்ட ஓர் அறிக்கையில் வறண்ட தென்மேற்கு பருவமழை 15.5.2023 முதல் தொடங்கும் என்று அறிவித்தது. இருப்பினும், 5.5.2023 அன்று, METMalaysia தனது முகநூல் பக்கத்தில் பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் வடக்கு பேராக் ஆகிய இடங்களில் 2023,ஜூன் மாதத்தில் 50 மி.மீ முதல் 300 மி.மீ வரை மழை பெய்யக்கூடும் என்று அறிக்கை வெளியிட்டது.
வருகின்ற செப்டம்பர் மாதம் வரை அணையின் இருப்புகளை தக்கவைக்க ஆயர் ஈத்தாம் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் ஓரளவு மழை பெய்யும் என நம்புகிறோம்.
PBAPP, ஆயர் ஈத்தாம் அணையின் ‘அதன் பகுதிகளில் நீர் விநியோகத்தைக் குறைத்து’ ஆயர் ஈத்தாம் பகுதியில் உள்ள 6,000 நீர் பயனீட்டாளர்களுக்கும் சிறந்த முறையில் நீர் விநியோகித்துள்ளது. இதன் பொருள், சாதாரண நேரங்களில் சுமார் 28,948 பயனீட்டாளர்களுடன் ஒப்பிடும்போது, மே 2023 இல், ஆயர் ஈத்தாம் அணையில் உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரைச் சார்ந்து இருப்பது சுமார் 6,000 நீர் பயனீட்டாளர்கள் மட்டுமே.
சுங்கை டுவா நீர் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை “சரிசெய்து” பிரதான முறையில் செலுத்துவதன் மூலம் இந்த ஆயர் ஈத்தாமில் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பயனீட்டாளர்களைச் சென்றடைய வழிவகுக்கிறது. “நீர் விநியோகப் பகுதியைக் குறைத்து” ஆயர் ஈத்தாம் அணையிலிருந்து தினசரி விநியோகிக்கும் நீரைக் கணிசமாகக் குறைக்க PBAPP அனுமதிக்கிறது.
1.1.2023 முதல், ஆயர் ஈத்தாம் அணையில் இருக்கும் நீர்மட்டத்தைக் குறையவிடாமல் தவிர்க்க PBAPP பிற வறண்ட வானிலைக் கட்டுப்பாட்டுப் பொறியியல் நடவடிக்கைகளையும் செயல்படுத்தி வருகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், இந்தக் கட்டுப்பாடுகள் படிப்படியாகக் கடுமையாக்கப்படும்.
PBAPP அதன் வறண்ட வானிலை கட்டுப்பாட்டு பொறியியல் நடவடிக்கைகளை மேலும் “கடுமையாக்கத்” திட்டமிடுகிறது. இருப்பினும், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது நீர் விநியோக சேவைகளைப் பாதிக்கலாம்.
நாங்கள் மக்களுக்கும், வணிகர்களுக்கும் தேவையில்லாத இடையூறுகளை ஏற்படுத்த விரும்பவில்லை. எனவே, PBAPP பினாங்கில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மிக அவசியமான தருணத்தில் மட்டுமே செயல்படுத்தும்; அதன் நடவடிக்கை செயல்பாடுக் குறித்து பொதுமக்களுக்கு முன் அறிவிப்பு செய்வோம்.
அணை நிலவரம்: “நீர்மட்டம்” vs “நாட்கள்”
இந்த மாதத் தொடக்கத்தில், ஆயர் ஈத்தாம் அணையின் மூல நீர் இருப்பு 2023,ஜூன் இறுதி வரை மட்டுமே நீடிக்க முடியும் என்று ஊடகச் செய்திகளில் வெளியிடப்பட்டது. இருப்பினும், அந்தச் செய்தி அறிக்கைகள் 2 முக்கியமான கூறுகளைக் குறிப்பிடவில்லை:
இந்த “காலக்கெடு” அணையின் செயல்திறன் நீர்மட்டம் 41.5% ஆக இருக்கும்போது, ஒரு நாளைக்கு சராசரியாக 22 மில்லியன் லிட்டர் (MLD) எடுக்க முடியும். இருப்பினும், PBAPP ஏற்கனவே தினசரி நீரின் விநியோகத்தை 15 MLD ஆகக் குறைத்துள்ளது.
ஆயர் ஈத்தாம் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் “பூஜ்ஜிய மழை” இருந்தால் மட்டுமே இந்தக் காலக்கெடு பொருந்தும். அங்கு மழை பொழிந்தால் தானாகவே இந்த காலக்கெடுவை சில நாட்களுக்கு நீட்டிக்கலாம் அல்லது மாற்றலாம், குறிப்பாக நீர்ப் பயன்பாடு குறைவாக இருந்தால் இது சாத்தியமாகும்.
எனவே, PBAPP பொதுவாக அணையின் நீர்மட்டம் பற்றி விவாதிக்கும் போது “உண்மையான நீர் பயன்பாட்டு விழுக்காடு” மீது கவனம் செலுத்தும், மாறாக “எஞ்சியிருக்கும் சாத்தியமான நாட்கள்” அல்ல.
ஆயர் ஈத்தாம் நீர் பயனீட்டாளர்களின் ஒத்துழைப்பு
ஆயர் ஈத்தாமில் அமல்படுத்தக்கூடிய நீர் விநியோகச் சேவைகளை நிலைநிறுத்தும்போது அப்பகுதியில் அடுத்த மழைக்காலம் வரும் வரை ஆயர் ஈத்தாம் அணையின் இருப்புகளை PBAPP நிர்வகிக்க முடியும்.
வெற்றி அடைவது இரண்டு காரணிகளைப் பொறுத்தது: அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பொழிதல் மற்றும் ஆயர் ஈத்தாமில் தினசரி நீர் பயன்பாடு குறைக்க வேண்டும்.
எங்களின் வெற்றி வாய்ப்பை கணிசமாக அதிகரிக்க ஆயர் ஈத்தாம் மக்கள் குறைந்த நீரைப் பயன்படுத்தி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆயர் ஈத்தாம் அணையின் மூல நீர் இருப்பு குறைவாக இருப்பதால், தயவுசெய்து உங்கள் நீரின் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளவும்.
உங்கள் தோட்டம் அல்லது செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு நீர்க்குழாய் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். உங்கள் கார் அல்லது மோட்டார் சைக்கிள்களைக் கழுவ குழாய் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். உங்கள் குழாயில் நீர் வழிய விடாதீர்கள். கூடுதல் நீர் சேமிப்புக் குறிப்புகளுக்கு, www.pba.com.my அகப்பக்கத்தைப் பார்வையிடவும்.
ஆயர் ஈத்தாம் அணையின் மூல நீர் இருப்பு இன்னும் 120 நாட்களுக்கு நீடிக்க பொது மக்கள் உங்களின் செயல்கள் மூலம் பங்கு வகிக்கவும். இதன் மூலம், உங்களுக்கும், உங்கள் அண்டைவீட்டாருக்கும் மற்றும் சமூகத்திற்கும் நேரடியாக நன்மை அளிக்கும்.
நன்றி.
_________________________________________________________________________
எழுத்தாக்கம் :
Syarifah Nasywa bt Syed Feisal Barakbah
கார்ப்பரேட் தகவல் பிரிவு
மின்னஞ்சல் :[email protected]