பினாங்கு விளையாட்டுச் சங்கமும் தே புரோஜேக் குழுவினரும் இணைந்து 19-வது அனைத்துலக ஹாக்கி போட்டியை கடந்த 13 ஜுன் 2015-ஆம் நாள் இனிதே நடத்தினர். இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி . ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் ஏற்பாடுச் செய்திருந்த இப்போட்டியை வரவேற்றார் துணை முதல்வர்.
இம்முறை அனைத்துலக ஹாக்கி போட்டியில் ஹாங் கோங், சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரோலியா சார்ந்த அனைத்துலக போட்டியாளர்களுடன் 15 உள்நாட்டு குழுக்களும் கலந்து கொண்டனர். இதனிடையே, இவ்வாண்டு 200-க்கும் மேற்பட்ட போட்டியாளர்களில் சிலர் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது பாராட்டக்குறியதாகும். இம்மாதிரியான போட்டிகளின் மூலம் இளைஞர்களின் திறமைகள் வெளிப்படுத்தப்படுவதோடு விளையாட்டுத் துறையிலும் தங்களை ஈடுப்படுத்தி கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. போட்டியாளர்களிடையே இனம், மொழி பேதமின்றி நல்லுறவு வலுவடையும் என நம்பிக்கை தெரிவித்தார். இப்போட்டிகளின் வழி சிறந்த விளையாட்டாளர்களை உருவாக்கும் மாநில அரசின் முயற்சியைப் பாராட்டினார் ப.இராமசாமி.
காலை மணி 9.00 தொடங்கி மாலை மணி 4.00 வரை நடைபெற்ற ஹாக்கி போட்டியில் “காவ்லோன் குழுவினர்” முதல் இடத்தை வென்று வெற்றி கோப்பையைத் தட்டிச்சென்றனர். இரண்டாம் மற்றும் மூன்றாவது இடத்தை என்.எஸ் வெத்ரன்ஸ் குழுவும், இந்தேல்மாஹா லோகிஸ்திக் குழுவும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.} else {