20 மாணவர்கள் ரிம1 மில்லியன் மதிப்புள்ள UNITAR கல்வி உதவித்தொகையைப் பெற்றனர்

Admin
img 20240627 wa0045

ஜார்ச்டவுன் – யூனிதார் கல்வி குழுமம் (UNITAR), பினாங்கு மாநில அரசாங்கத்துடன் இணைந்து, பினாங்கு குடிமக்களுக்கு குறிப்பாக பி40 குழுவினருக்கு கற்றல் வாய்ப்புகளை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, பி40 குழுவைச் சேர்ந்த தகுதியான 20 மாணவர்கள் பயன்பெறும் வகையில், இந்நிறுவனம் ரிம1 மில்லியன் நிதி ஒதுக்கியுள்ளது.

கடந்த ஆண்டும், இந்நிதி ஒதுக்கீடு13 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ உத்தாமா அஹ்மத் ஃபுஸி பின் ஹாஜி அப்துல் ரசாக் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த முன்முயற்சி திட்டம், தரமான கல்விக்கான அணுகலை வழங்குவதன் மூலம் பி40 குழுவைச் சேர்ந்த மாணவர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இன்று ஶ்ரீ முத்தியாராவில் நடைபெற்ற உதவித்தொகை வழங்கும் விழாவில் தகுதிப்பெற்ற மாணவர்கள் டிப்ளோமா படிப்பைத் தொடர்ந்து, இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடரும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் பினாங்கு மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், UNITAR துணை வேந்தர் பேராசிரியர் எம்ரிதுஸ் தான் ஶ்ரீ டத்தோ ஶ்ரீ டாக்டர் Ir. சஹோல் ஹமிட் பின் அபு பாக்கார், UNITAR கல்விக் குழுமத் தலைவர் புவன் பாலகிருஷ்ணன் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

“பினாங்கு மாநில அரசு அறிவுள்ள சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் கல்வியின் அம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

“நாட்டின் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதில் கல்வியின் வளர்ச்சியை வலுப்படுத்தும் முயற்சியில் UNITAR உடன் இணைந்து மாநில அரசின் உறுதிப்பாட்டுக்கு இந்நிகழ்ச்சி சான்றாக அமைகிறது,” என்று இந்நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கிய மாநில முதலமைச்சர் தெரிவித்தார்.

“மேலும், பினாங்கு வாழ் மாணவர்களுக்காக ரிம1 மில்லியன் கல்வி உதவித்தொகையை வழங்கிய UNITAR நிறுவனத்திற்கு எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முயற்சி UNITAR என்பது அறிவுள்ள மற்றும் தரமான தலைவர்களின் தலைமுறையை உருவாக்குவதற்கான ஒரு மகத்தான அடி எடுத்து அரசாங்கத்தின் சவாலுக்கு உறுதுணையாக நிற்கிறது,” என பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில், புதிய சகாப்தத்தின் மாணவர்கள் நடப்பு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெறுவதிலும் பயன்படுத்துவதிலும் சிறந்து விளங்குகின்றனர், என்றார்.

img 20240627 wa0047

இந்த டிஜிட்டல் முன்னேற்றத்தை ஆதரிப்பதும் வளர்ப்பதும் எங்களுக்கு மிக அவசியமாகும். ஏனெனில், தேசிய அடிப்படையில் அறிவார்ந்த மற்றும் பசுமையான மாநிலத்தை உருவாக்க பினாங்கு2030 இலக்குக்கு இணங்க எதிர்காலத்தில் டிஜிட்டல் சவால்களை எதிர்கொள்ள நமது எதிர்கால தலைவர்களை தயார்படுத்துவது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.