மூத்த குடிமக்களைப் போற்றும் தங்கத் திட்டத்தின் வழி பினாங்கு மக்கள் கூட்டணி அரசு கொடுத்த உறுதிமொழியினை 2015-ஆம் ஆண்டும் மீண்டும் காப்பாற்றியுள்ளது . அதன்படி 1 ஜனவரி 1953–ஆம் ஆண்டிற்கு முன்பு பிறந்த, 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மூத்தக் குடிமக்களுக்கும் ஆண்டுதோறும் தலா ரிம100 ரிங்கிட்டினை வழங்கி வருகிறது. இப்பணம், பினாங்கு மாநில வளர்ச்சிக்காகப் பல ஆண்டுகளாக உழைத்த மூத்தக் குடிகளின் சேவையினைப் போற்றும் வண்ணம் வழங்கப்படுகிறது. இதனிடையே, தனித்து வாழும் தாய்மார்களுக்காகத் தங்கத் தாய் திட்டமும் அறிமுகப்படுத்தியது நன்கு அறிந்ததே. மூத்தக் குடிமக்களுக்கு முதலாம் தவணைக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் மார்ச் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது என செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
பினாங்கு மாநிலத்தில் 2008 முதல் 2014-ஆம் ஆண்டு வரை ரிம126.35 மில்லியன் தங்கத் திட்டத்திற்காக வழங்கப்பட்டது பாராட்டக்குறியதாகும். இவ்வாண்டு முதலாம் தவணைக்கான மூத்தக் குடிமக்கள் தங்கத்திட்டத்திற்காக ரிம15.69 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என மேலும் விவரித்தார். இந்த உதவித்தொகை வருகின்ற 9 மார்ச் முதல் 20 மார்ச் 2015 வரை மூத்தக்குடிகளுக்கு வழங்கப்படும்.}