- செபராங் பிறை- பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் (பி.பி.ஏ) 184 ஊழியர்கள் இன்று தேசிய இரட்டை பயிற்சி கல்வி(Sistem Latihan Duol Nasional) துறையில் பட்டம் பெற்றனர்.செபராங் பிறை பொலிதெக்னிக் அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் பட்டமளிப்பு விழாவை அதிகாரப்பூர்வமாக மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தொடக்கி வைத்து பட்டதாரிகளுக்குச் சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.
பிபி.ஏ வாரியம் பினாங்கு நீர் விநியோக அகாடமி அமைத்து தனது ஊழியர்களை நீர் விநியோகத் துறையில் திறன்மிக்க வல்லுனர்களாக உருவாக்குவது பாராட்டக்குரியச் செயல் என புகழாரம் சூட்டினார்.
மாநிலப் பொருளாதார திட்டமிடல், கல்வி, மனித மூலதன மேம்பாடு, தொழில்நுட்பம் & புத்தாக்க ஆட்சிக்குழு உறுப்பினருமான இராமசாமி கூறுகையில், இந்த அகாடமி பினாங்கில் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் கிளை அகாடமி திறந்து தேசிய ரீதியிலும் நீர் விநியோக பணியாளர்கள் தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்க வழிகாட்டியாகத் திகழ்கிறது.“பி.பி.ஏ வாரியம் வருகின்ற 2019-ம் ஆண்டு இறுதிக்குள் அவ்வாரியத்தின் தொழில்நுட்ப ஊழியர்கள் நீர் வாரிய பொறியியல் துறையில் 100% பட்டம் பெற இலக்கு கொண்டுள்ளது,” என அதன் தலைமை நிர்வாக அதிகாரி பொறியியலாளர் ஜாசானி மைடின்சா தெரிவித்தார்.- பி.பி.ஏ வாரியத்தில் மூத்த தொழில்நுட்ப ஊழியர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் ஆலை பணியாளர்கள் என 204 ஊழியர்கள் நீர் விநியோகம் மற்றும் நீர் சுத்திகரிப்பு பிரிவில் பணிப்புரிகின்றனர்.