பினாங்கு மாநில நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் துறையும் மாநில அரசும் இணைந்து விளம்பரப்படுத்துதல் மற்றும் 2020 பினாங்கு மாநில கட்டமைப்பு திட்ட கலந்தாய்வு அறிக்கை (Program Publisiti dan Penyertaan Awam bagi Laporan Tinjauan Rancangan Struktur Negeri Pulau Pinang 2020) பொதுமக்கள் நேரடியாக பங்குப்பெறும் நோக்கில் நடைபெறும் என கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங்.
இத்திட்டத்தில் பொதுமக்கள், மேம்பாட்டாளர், அரசு சாரா இயக்கங்கள், மாணவர்கள், கழகங்கள் மற்றும் பொது அமைப்புகள் பங்குப்பெற செக்ஷன் 9, பிரிவு 172 கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து எட்டு வாரங்களுக்கு அதாவது 1 டிசம்பர் 2016 – 31 ஜனவரி 2017 வரை குறிப்பிடப்பட்டுள்ள மூன்று இடங்களில் நடைபெறவுள்ளது. கொம்தார் மூன்றாவது மாடியிலுள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் துறை, பினாங்கு மாநகர் கழகம் ஜாலான் துன் சாயிட் சே பரக்பா, மற்றும் பண்டார் பெர்டா செபராங் பிறை நகராண்மைக் கழக வளாகத்தில் விளம்பரப்படுத்துதல் மற்றும் 2020 பினாங்கு மாநில கட்டமைப்பு திட்ட கலந்தாய்வு அறிக்கை கூட்டம் காலை 9 மணி தொடங்கி மதியம் 4.30 வரை திங்கள் முதல் வெள்ளி கிழமைகளில் நடைபெறும் என மேலும் விரிவுப்படுத்தினார் முதல்வர்.
இதனிடையே, இந்த ஆய்வில் பங்குப்பெறவிரும்புவோர் பினாங்கு மாநில நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டமிடல் துறை அகப்பக்கத்தில் பாரத்தை பதிவிறக்கம் செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். மேல் விபரங்களுக்கு 04-6505560/04-6505672/04-6505444/04-6505428 எனும் எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.
அனைத்து தரப்பினரும் நேரடியாக பினாங்கு வளர்ச்சி திட்டங்களில் பங்குப்பெறவும் அதனை அறிந்துகொள்ளவும் இந்த கலந்தாய்வு திட்டம் உறுதுணையாக அமையும்.