2021-2025 பெருந்திட்டத்தின் கீழ் 14 முன்னோடி வீடமைப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல்

Admin

புக்கிட் தம்புன் – மாநில அரசாங்கம் பினாங்கு மாநில வீட்டுவசதி வாரியம் (LPNPP) மூலம் மாநிலத்தில் பினாங்கு வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடுகள் (RMMPg) மற்றும் நகர்ப்புற புதுப்பித்தல் (PSB)க்கான 14 முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்த 2021-2025 பெருந்திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளித்துள்ளது.

பராமரிப்பு அரசாங்க முதலமைச்சருமான மேதகு சாவ் கொன் இயோவ், பெர்மாத்தாங் திங்கி வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டத்தின் (RMM) தொடக்க விழாவின் போது இவ்வாறு கூறினார்.

இந்தப் பெருந்திட்டத்தின் கீழ் RMM A பிரிவில் 4,066 வீடுகள், RMM B பிரிவில்
8,326 வீடுகள் மற்றும் RMM C பிரிவில்
20,600 வீடுகள் என ஏறக்குறைய 32,992 வீடுகள் நிர்மாணிக்க இலக்கு கொண்டுள்ளது என்று பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினருமான சாவ் கூறினார்.

“போதுமான RMM-ஐ வழங்குவதற்கான முயற்சிகள் சமூகத்தின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலின் அம்சங்களின் தரத்தை உயர்த்த வலியுறுத்துகின்றன.

“எனவே, பெர்மாத்தாங் திங்கி வாங்கும் சக்திக்கு உட்பட்ட வீடமைப்புத் திட்டத்தில் ‘பாதுகாப்பு’ அம்சம் கொண்ட பிற ஆடம்பர வீடமைப்புத் திட்டங்கள் போல வசதிகளைக் கொண்டிருக்கும்,” என்று அவர் விளக்கமளித்தார்.

பெர்மாத்தாங் திங்கி RMM திட்டம் அல்லது முன்பு கம்போங் தொங்காங் என்று அழைக்கப்பட்ட இத்திட்டமானது மாநிலத்தில் செயல்படுத்தப்படும் இரண்டாவது திட்டம் என அறியப்படுகிறதும்.

இதற்கு முன்னதாக செயல்படுத்தப்பட்ட LPNPP இன் முதல் திட்டமானது RMM புக்கிட் கெடோங் அல்லது தி மில்லினியா @ பாயான் லெப்பாஸ் என அறியப்பட்டது. இது மாநில அரசுக்கு ரிம4.6 மில்லியன் நிதி பங்களிப்பு வழங்கியது.

LPNPP ஆல் மேற்கொள்ளப்படும் பெர்மாத்தாங் திங்கி RMM திட்டம், மாநில அரசுக்கு வழங்கப்படும் உரிமைகளின் மதிப்பில் 10 சதவீதம் அதாவது ரிம1.5 மில்லியன் நிதி கட்டம் கட்டங்களாக வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, என ஊராட்சி, வீட்டுவசதி, நகர்புறம் மற்றும் புறநகர் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜெக்டிப் சிங் டியோ கூறினார்.

LPNPP வாரியத்திடம் ஒப்படைக்க நிலம் கையகப்படுத்தும் செயல்முறைகள் நிறைவடைந்துள்ளது. மேலும், இந்த திட்டம் ஒரு சில கட்டமைப்புகளை மட்டுமே உள்ளடக்கும். இத்திட்டம் முழுமைபெற ஐந்து ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2028 ஆம் ஆண்டின் 4வது காலாண்டில் (Q4 2028) மேம்பாட்டுத் திட்டம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், LPNPP மற்றும் PTL ப்ராப்பர்டீஸ் சென் பெர்ஹாட் இடையிலான மேம்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதல் மற்றும்
LPNPP மற்றும் மாநில அரசு இடையிலான இலாபப் பகிர்வு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் (MoU) கையெழுத்திடும் விழாவும் முன்னாள் முதலமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாநில நிதி அதிகாரி, ஜபிடா சஃபர்; செபராங் பிறை மாநகர் கழக மேயர், டத்தோ அசார் அர்ஷாத் மற்றும் LPNPP மேலாளர், அய்னுல் ஃபாதிலா சம்சுதி கலந்து கொண்டார்.