பிறை தொகுதியில் தேசியக் கொடியை பறக்கவிடும் பிரச்சாரம் தொடக்கம் கண்டது

rajoo

 

பிறை – பிறை தொகுதியின்  அளவிலான 2024-ஆண்டுக்கான சுதந்திர மாதக் கொண்டாட்டம் மற்றும் தேசியக் கொடியை பறக்கவிடுவோம் எனும் பிரச்சாரம் சிறப்பாக தொடக்க விழாக் கண்டது.

 

இந்த ஆண்டின் தேசிய மாத பிரச்சாரத்துடன் இணைந்து நாட்டின் மீதான தங்கள் நேசத்தைக் காட்ட வேண்டும் என பொது மக்களுக்கு பராமரிப்பு அரசாங்கத்தின் வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சுந்தராஜு அறிவுறுத்தினார்.

 

“Malaysia MADANI: Jiwa Merdeka” என்பது 67 ஆண்டுகால சுதந்திரத்தை எட்டியுள்ள நமது நாட்டின் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தேசிய தினம்  கருப்பொருளுக்கு ஏற்ப, தேசிய மாதக் கொண்டாட்டத்தை மேலும் பெருகூட்ட இந்த மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் ஈடுபாடும் மிகவும் முக்கியமானது, என்று அவர் கூறினார்.

“தேசிய மாதம் முழுவதும் அட்டவணையிடப்பட்ட நிகழ்ச்சிகளும் சாராம்சமும் மக்களிடையே தேசபக்தியின் உணர்வை எழுப்ப முக்கிய பங்கு வகிக்கிறது.

“மாநில அளவிலான, இந்த தேசிய மாதம் கொண்டாட்டத்தை முன்னிட்டு நாள்காட்டியில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு மாநில அரசு முழுமையாக ஆதரவளிக்கும்.

“எனவே, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம், நாட்டின் மீதான நமது தேசபக்தியை வெளிப்படுத்தும் வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்துவோம்,” என பிறை எம்.பி.கே.கே தொகுதியின் தேசியக் கொடியை பறக்கவிடும் பிரச்சாரத்தைத் தொடக்கி வைத்து இவ்வாறு கூறினார்.

இந்த ஆண்டு தேசிய மாதக் கொண்டாட்டத்தின் கருப்பொருளானது மாநிலத்தையும் நாட்டையும் மேம்படுத்த அனைத்துத் தரப்பினரின் கடமை உணர்ச்சி, உறுதிபாடு, அர்ப்பணிப்பு ஆகியவை ஊக்குவிக்கத் தூண்டுவதாக, என எம்.பி.கே.கே தலைவர் ஶ்ரீ சங்கர் கூறினார்.

rajoo 2

இந்த சுதந்திர மாதம் மற்றும் தேசியக் கொடியை பறக்கவிடுவோம் எனும் கொண்டாட்டம் மலேசியா நாட்டின் மீது கொண்ட மரியாதை, சுபிட்சம் மற்றும் அமைதிக்கான தேசபற்றை பதிவுச் செய்யும் மடானி அரசாங்கத்தின் முயற்சியாகத் திகழ்கிறது.