பினாங்கில் ஒற்றுமை வலுப்பெற கலாச்சார பன்முகத்தன்மை அடித்தளமாக அமைகிறது – முதலமைச்சர்

37e60b4d e8d2 4991 8c10 e22ccf1d591f

ஜார்ச்டவுன் – “நமது சமூகத்தில் நல்லிணக்கத்துடன் இணைந்திருக்கும் கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளின் பன்முகத்தன்மை பெருமைக்குரியது. இந்த வேறுபாடுகள் வித்தியாசமாக கருதப்படாமல், நமது கலாச்சாரத்தை செழுமைப்படுத்தும் தனித்துவமாகக் கொண்டாடுகிறோம்.

63e3679d 4fa1 4b05 a3bb a75a5f56961a

தீபாவளிப் பண்டிகை மிகவும் அர்த்தமுள்ள கொண்டாட்டமாகும். ஏனெனில், இது நமது இந்தியக் கலாச்சாரத்தின் தனித்துவத்தையும் அழகையும் கொண்டாடுவதில் இனம் மற்றும் மதம் பாராமல் அனைத்து மக்களும் பங்கேற்க வாய்ப்பளிக்கிறது. எனவே, பினாங்கில் ஒற்றுமை மற்றும் சமூக ஒற்றுமையை நிலைநிறுத்தும் நமது பலத்தின் ஓர் அங்கமாகத் திகழ்கிறது.

பினாங்கு மாநில அரசு மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு இனத்தின் கலாச்சாரம் மற்றும் மரபுகளை ஆதரிப்பதற்கும் பராமரிப்பதற்கும் தொடர்ந்து உறுதியளிக்கிறது. எனவே, பினாங்கு பன்முகத்தன்மையைப் போற்றும் மற்றும் கொண்டாடுவதோடு ஒவ்வொரு வித்தியாசத்தையும் திறந்த மனதுடன் மற்றும் மரியாதையுடன் ஏற்றுக்கொள்ளும் மாநிலமாக இருக்க மாநில அரசு தொடர்ந்து பாடுப்படும்.

img 20241118 wa0121
இது அமைதி மற்றும் நல்வாழ்வின் அடிப்படை என்றும், இணக்கமான சமுதாயத்தின் வெற்றிக்கான அடித்தளம் என்றும் நான் நம்புகிறேன். அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஒரு மாநிலத்திற்கு பினாங்கு ஓர் எடுத்துக்காட்டாகத் தொடரும், அங்கு அனைவரும் இந்த மாபெரும் சமூகத்தின் ஒரு பகுதியாக உணரப்படுவார்கள்,” என்று பினாங்கு மாநில அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ உத்தாமா அஹ்மத் ஃபுஸி பின் ஹாஜி அப்துல் ரசாக், மாநில சபாநாயகர் டத்தோ ஸ்ரீ லாவ் சூ கியாங், இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ, ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

“தேசிய ரீதியில் பிரமிக்கும் குடும்பத்தை மையமாகக் கொண்ட பசுமை மற்றும் விவேக மாநிலத்தை உருவாக்குதல் எனும் பினாங்கு2030 இலக்கின் அடிப்படையில் பினாங்கு மாநில அரசாங்கம் இந்தியச் சமூக மேம்பாட்டுக்கு பல முன்முயற்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

மாநில அரசு மனிதவளத்தை வலுப்படுத்துவதற்குக் கல்வி மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கிறது. அதன் அடிப்படையில், மாநில அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் மானியம் வழங்குகிறது. இதன் வழி, சிறந்த மற்றும் வசதியான கற்றல் கற்பித்தல் சூழல் மாணவர்கள் மிகவும் திறம்பட கல்வி கற்க உதவுகிறது, என்றார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் குறைந்த வசதிக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்வி நிதியுதவி வழங்கி வருகிறது. கடந்த 2024, அக்டோபர் மாதம் வரை, மொத்தம் 3,698 தகுதியான மாணவர்கள் கல்வி நிதி உதவியாக ரிம4.87 மில்லியன் பெற்றுள்ளது பாராட்டக்குரியதாகும்.

“மாநில அளவிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை சிறப்பாக ஏற்பாடு செய்த இரண்டாம் துணை முதலமைச்சர் ஜக்தீப் சிங் டியோ மற்றும் அவரது அலுவலகத்திற்கு மிக்க நன்றி,” என்று சாவ் தனது உரையில் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், ருசியான உணவைத் தவிர, பினாங்கில் புகழ்பெற்ற நடனக் குழுக்கள் மற்றும் பாடகர்களின் ஆற்றல் மிக்க படைப்புகளால் விருந்தினர்களைக் கவர்ந்தனர்.