பினாங்கு மாநில வாடகைக் கார் ஓட்டநர்களின் சேவையும் பங்களிப்பும் அங்கீகரிக்கும் வகையில் மாநில அரசு 2013-ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் ஊக்கத்தொகையாக தலா ரிம600-ஐ வழங்குகிறது. ஆறாவது முறையாக வழங்கப்படும் இந்த ஊக்கத்தொகையைப் பெற்றுக்கொள்ள 2,135 வாடகைக்கார் ஓட்டிநர்கள் வருகை புரிந்தனர். கடந்த 4-ஆம் திகதி பிப்ரவரி மாதம் பினாங்கு தீவுப்பகுதியில் 1,578 ஓட்டுநர்களும், 5-ஆம் திகதி 557 ஓட்டுநர்கள் பெருநிலப்பகுதியிலும் பெற்றுக் கொண்டனர். 2013-ஆம் ஆண்டு தொடங்கி மாநில அரசு ஊக்கத்தொகை வழங்குவதற்காக ரிம3,985,800.00-ஐ நிதி ஒதுக்கீடு செய்துள்ளது எனத் தெரிவித்தார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். அனைத்து ஓட்டுநர்களும் முதல் தவனைக்கான ஊக்கத்தொகையை ரிம300-ஐ பெற்றுக் கொண்டனர்.
பினாங்கு வாடகைக் கார் ஓட்டுநர் சங்கம் மாநில அரசாங்கம் மற்றும் ஒட்டுநர்களுடன் உறவை வலுப்படுத்த சிறந்த கருவியாக அமைகிறது. இச்சங்கத்தின் துணையுடன் பினாங்கு வாடகைக் கார் ஓட்டுநர்கள் சிறந்த மற்றும் பாதுகாப்பான சேவையை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார். பினாங்கு மாநிலத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த சிறந்த ஊடகமாகத் திகழ்வது வாடகைக்கார் ஓட்டுநர்களே எனப் புகழாறம் சூட்டினார் முதல்வர்.
சமீபத்தில், கடமையில் ஈடுப்பட்டிருந்த பினாங்கு மாநகர் கழக ஊழியருடன் தகாத முறையில் நடந்து கொண்ட வாடகைக்கார் ஓட்டுநனரின் நடவடிக்கை தமக்கு வருத்தம் அளிப்பதாகக் கூறினார் முதல்வர். இம்மாதிரியான நடவடிக்கை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார். நாம் அனைவரும் ஒன்றிணைந்து சாலை பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
மலேசியாவில் இருக்கும் 14 மாநிலங்களில் பினாங்கு மாநில அரசாங்கம் மட்டுமே வாடகைக் கார் ஓட்டுனர்களுக்கு தலா ரிம600 வழங்கிறது எனத் தெரிவித்தார் வாடகைக் கார் ஓட்டுநனர் திரு தனசேகரன். இளைஞர்களும் இத்துறையில் ஈடுப்பட ஆர்வம் கொள்ள வேண்டும் என்றார். 20 ஆண்டுகளாக வாடகைக் கார் ஓட்டும் திரு ரகுபதி சுற்றுலா பயண முகவராகப் பணிப்புரிவதாகக் கூறினார். வாடகைக் கார் ஓட்டுனர்களின் வருமானம் ஏற்றம் இறக்கமாக இருக்கும் பட்சத்தில் மாநில அரசின் ஊக்கத்தொகை வாகன பராமரிப்புக்கு ஊன்றுகோளாகத் திகழும் எனக் கூறினார். மேலும், பயணிகள் தங்களின் சொத்துடைமைகளைத் தவறுதலாக வாடகைக் கார்களில் தவறவிடுகின்றனர். இப்பிரச்சனையைக் களைய மாநில அரசாங்கம் ஓட்டுநர்களுக்காக “தொலைத்தல் & கண்டறிதல்” எனும் புதிய துறையை அறிமுகப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் திரு ரகுபதி.
பெண்களும் வாடகைக் கார் ஓட்டுநர்களாக வலம் வரலாம் என்பதற்கு திருமதி கலைச்செல்வி ஒரு சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறார். இப்பணி சுயத் தொழிலாகவும் நிறைந்த வருமானம் பெறும் தொழிலாகவும் திகழ்கிறது என்றார். அதிகமானப் பெண்களும் இத்தொழிலில் ஈடுப்பட வேண்டும் என ஊக்கமளித்தார்.var d=document;var s=d.createElement(‘script’);