செபராங் ஜெயா – செபராங் பிறை வட்டாரத்தில் ஏறக்குறைய 79,909 ஏக்கர் நிலப்பரப்பில் நகர்ப்புற விவசாயத் தளமாக மேம்படுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
இந்த வட்டாரத்தில் அடையாளம் காணப்பட்ட இந்நிலம் தனி நபருக்குச் சொந்தமான நிலம் மற்றும் மேம்பாடு காணாத அல்லது பயன்படுத்தப்படாத அரசாங்க இருப்பு நிலங்களும் உள்ளடங்குவதாக செபராங் பிறை மாநகர் கழக மேயர் டத்தோ ரோசாலி முகமது செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
“நகர்ப்புற விவசாயத்தைப் பற்றி பேசும்போது, நாங்கள் இனி பக்கத்திலோ அல்லது கொல்லைப்புறத்திலோ உள்ள பயிர்களைப் பற்றி பேசுவதில்லை, மாறாக குடியிருப்பாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய பெரிய அளவிலானத் திட்டங்கள் செயல்படுத்த வலியுறுத்துகிறோம்.
“அது தவிர, பெரிய அளவிலான நகர்ப்புற விவசாயத் திட்டங்கள் பல உணவு வங்கிகளை உற்பத்தி செய்ய முடியும். மேலும், செபராங் பிறை மக்களுக்கு ஒரு நிலையான நகரத்தை உருவாக்குகின்றன.
எனவே, அனைவரின் நலனுக்காக செபராங் பிறை மக்களுடன் இணைந்து இந்தத் துறையை மேம்படுத்த எம்.பி.எஸ்.பி உறுதிபூண்டுள்ளது,” என்று மேயர் எம்.பி.எஸ்.பி
பி.டபிள்யூ.டி.சி (PWDC) மற்றும் ஜெ.பி.டபிள்யூ. கே(JPWK) இணை ஆதரவில் நடைபெற்ற நகர்ப்புற தோட்டத் திட்டத்திற்கானப் பரிசு வழங்கும் விழாவை முடித்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில், எம்.பி.எஸ்.பி கவுன்சிலர்கள்; பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் (PWDC) தலைமை நிர்வாக அதிகாரி, ஓங் பீ லெங்; கலை, கணினி மற்றும் படைப்பாற்றல் தொழில் துறையின் தலைமை ஆலோசகர், சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழக(UPSI), பேராசிரியர் டாக்டர். சே ஜலினா சுல்கிஃப்லி; எம்.பி.எஸ்.பி.மாநகர் செயலாளர், பத்ருல் அமீன் அப்துல் ஹமீத் மற்றும் எம்.பி.எஸ்.பி-யின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நகர்ப்புற தோட்டத் திட்டமானது எம்.பி.எஸ்.பி, பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் (PWDC) மற்றும் பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டுக் குழு (JPWK) இடையிலான கூட்டு முயற்சியில் கடந்த 2021, நவம்பர் 15 முதல் 29 வரை இப்போட்டி நடைபெற்றது.
செபராங் பிறையில் உள்ள மூன்று மாவட்டங்களை உள்ளடக்கி இதுவரை 30 சமூகத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, என ரோசாலி கூறினார்.
இதில் 11 சமூக விவசாயத் திட்டங்கள் (வட செபராங் பிறை), 12 திட்டங்கள் மத்திய செபராங் பிறை மற்றும் ஏழுத் திட்டங்கள் தெற்கு செபராங் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டன.
“சமூக தோட்டத் திட்டமானது எதிர்காலத்திற்கான ஒரு முக்கிய அம்சமாகும். ஏனெனில் இது சமூகத்திற்கு பல நன்மைகளை வழங்கும் அத்துடன் வேலை வாய்ப்புகள், தொழில்முனைவர் மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை வழங்கும்,” என்றார்.
பொது மக்களிடையே பசுமைத் திட்டங்களில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
“இப்போட்டியில் கலந்து கொள்ள மொத்தமாக 22 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற திட்டங்களைத் தொடர்ந்து ஏற்பாடு செய்வோம்.
ஒருமுறை மட்டுமே பயன்படும் நெகிழி டிஜிட்டல் மின்-விளையாட்டு மற்றும் கல்வி சார்ந்த பசுமை விளையாட்டுக்கான காப்புரிமைச் சான்றிதழை
Perbadanan Harta Intelek Malaysia (MyIPO) அக்டோபர், 15 ஆம் தேதி அங்கீகரித்ததாக ரோசாலி தெரிவித்தார்.
ஒருமுறை மட்டுமே பயன்படும் நெகிழி டிஜிட்டல் கல்வி சார்ந்த விளையாட்டு எம்.பி.எஸ்.பி மற்றும் UPSI இடையிலான ஒத்துழைப்பில் கடந்த 2020, டிசம்பர்,20 அன்று தொடங்கப்பட்டது.
“சட்டப்பூர்வ பதிப்புரிமையை மேயர் டத்தோ ரோசாலி முகமது, பேராசிரியர் டாக்டர். சே ஜலினா சுல்கிஃப்லி மற்றும் சிவ் எங் செங் இந்த டிஜிட்டல் கல்வி விளையாட்டின் உரிமையாளர் மற்றும் படைப்பாளராகவும் அங்கீகரிக்கப்பட்டனர்,” என்று அவர் விளக்கமளித்தார்.