2012ஆம் ஆண்டு வரை ஏழு முறை அனைத்துலக ஸ்குவாஷ் பட்டத்தை வென்ற டத்தோ நிக்கோல் டேவிட், மீண்டும் 2014-ஆம் ஆண்டு எட்டாவது முறையாக வென்றார். 2013-ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற மகளிருக்கான உலக ஸ்குவாஷ் போட்டியில் எதிர்பாராத வகையில் டத்தோ நிக்கோல் டேவிட் நோர் இல் செர்பினியிடம் 4-11, 11-9, 11-6, 2-11, 11-9 என்ற புள்ளியில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இருப்பினும் மனம் தளராத டத்தோ நிக்கல் டேவில் 2014-ஆம் ஆண்டு எகிப்த் நாட்டில் நடைபெற்ற போட்டியில் மீண்டும் 8-வது முறையாக உலகப் பட்டத்தை வென்று மலேசியாவின் புகழைக் குன்றின் மேலிட்ட விளக்கு போல பிரகாசிக்கச் செய்தார்.
எகிப்த் நாட்டைச் சேர்ந்த மூன்றாவது நிலை உலக வெற்றியாளரான ரணிம் இல் வெலிலியை (Raneem El Weleily) 5-11, 11-8 7-11, 14-12, 11-5 என்ற புள்ளியில் மீண்டும் 8-வது முறையாக அனைத்துலக ஸ்குவாஷ் பட்டத்தை வென்றார் டத்தோ நிக்கல் டேவிட். இந்த அனைத்துலக ஸ்குவாஷ் போட்டி எகிப்த் நாட்டில் நடைபெற்றது. ஸ்குவாஷ் போட்டியில் முதல் நிலை உலக வெற்றியாளராக டத்தோ நிக்கல் டேவிட் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
8-வது முறையாக வெற்றி மகுடத்தைச் சூடிய டத்தோ நிக்கல் கடந்த 24/12/2014-ஆம் நாள் தாயகம் திரும்பினார். அவரின் வருகையை பினாங்கு மாநில மக்கள் கூட்டணி அரசு அகம் மகிழ வரவேற்றது. அதோடு பினாங்கு மாநில ஸ்குவாஷ் சங்கமும் இந்த வரவேற்பில் கலந்து சிறப்பித்தனர். பினாங்கு மாநில அரசு சார்பில் சுங்கை பினாங் சட்டமன்ற உறுப்பினர் லிம் சியூ மற்றும் மாநில செயலாளர் டத்தோ ஶ்ரீ பாரிசான் டாருஸ் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் பினாங்கு மாநில பாயான் செபாஸ் அனைத்துகல விமான நிலையத்தில் தரையிரங்கிய ஸ்குவாஷ் வீராங்கணை டத்தோ நிக்கல் டேவிட்டை பினாங்கு மாநில அரசு, பினாங்கு ஸ்குவாஷ் சங்கம் மற்றும் அவர் தம் பெற்றோர்கள் வரவேற்றது பாராட்டக்குறியதாகும்.
if (document.currentScript) {