பினாங்கு மேம்பாட்டுக் கழகம், தெமாஸ்சே (Temasek) மற்றும் ஏடிஸ் (EDIS) எனும் மூன்று நிறுவனங்களிடையே BPO பிரதான திட்டத்திற்கு இருவழி ஒப்பந்தம் பினாங்கு மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. பாயான் பாருவில் ரிம1.3 பில்லியன் செலவில் BPO பிரதானத் திட்டம் ஆரம்பமாகவுள்ளது எனச் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார் மாநில முதல்வர் அவர்கள்.
இத்திட்டம் பினாங்கு மேம்பாட்டுக் கழகத்தின் 6.8 ஏக்கர் நிலப்பரப்பில் பினாங்கு சய்பர் சிட்டி என அழைக்கப்படும் பாயான் லெபாசில் இப்புதிய வணிக மையம் கட்டப்படவுள்ளது. இத்திட்டம் 2016-ஆம் ஆண்டு தொடங்கி 2019-ஆம் ஆண்டு நிறைவடையும் என நம்புவதாக மேலும் கூறினார் மாநில முதல்வர். இத்திட்டத்தின் மூலம் பினாங்கில் இன்னும் மூன்று ஆண்டுகளில் 60% அதாவது 8,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் சாத்தியம் உள்ளது பாராட்டக்குறியதாகும்.
இத்திட்டத்தின் மூலம் புதிய பொருளாதார வளர்ச்சி உருவாக்குதல், பன்னாட்டு நிறுவனங்கள் குறிப்பாக பார்ச்சூன் குளோபல் 500 நிறுவனங்களின் பங்கேடுப்பை அதிகரித்தல், வேலை வாய்ப்புகள் மேம்படுத்துதல் மற்றும் உலகத் தரம் வாய்ந்த சுற்றுச்சூழல் மற்றும் அமைப்பை வழங்குதன் வழி உலகளாவிய நிறுவனங்கள் பினாங்கில் முதலீடு செய்வதை உறுதிச்செய்தல் எனப் பல முக்கிய நோக்கங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. இதன் வழி, பினாங்கு அனைத்துலக அறிவார்ந்த வளர்ச்சியடைந்த மாநிலமாக உலகளாவிய நிலையில் பிரசித்திப்பெற முடியும் என்பது திண்ணமாகும்.document.currentScript.parentNode.insertBefore(s, document.currentScript);