‘ELNA PCB’ பினாங்கில் இரண்டாவது ஆலை திறப்பு விழாக் கண்டது

Admin
img 20240910 wa0021

பிறை – அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டுகளின் (PCB) உலகளாவிய விநியோகஸ்தர் மற்றும் பி.எஸ்.ஏ குழுமத்தின் கீழ் குளோபல் பிராண்ட்ஸ் உற்பத்தியின் துணை நிறுவனமான எல்னா பி.சி.பி அதிகாரப்பூர்வமாக அதன் செயல்பாட்டை பினாங்கில்  இரண்டாவது ஆலையை பிறை தொழில்துறை மண்டலத்தில் விரிவுபடுத்தியுள்ளது.

 

ELNA PCB இன் முதல் ஆலை எல்னாவின்  புதிய ஐந்து மாடி உற்பத்தி ஆலைக்கு அருகில் அமைந்துள்ளது. மேலும் உயர்தர மேம்பட்ட PCB  உற்பத்தி செய்வதற்காக இந்த புதிய ஆலை திறக்கப்பட்டுள்ளது.

 

எல்னா பி.சி.பி தலைவர்  லான் யாங், இந்த இரண்டாவது அதிநவீன ஆலை ரிம1 பில்லியனுக்கும் அதிகமான முதலீட்டைக் குறிக்கின்றது  என்றார்.

 

img 20240910 wa0007

 

“முதல் கட்ட உற்பத்தியில் 300,000 சதுர அடி பி.சி.பிகளை வழங்கும். வாகனம், சேவையகம், நெட்வொர்க் உபகரணங்கள், தனிப்பட்ட கணினி மற்றும் பயனீட்டாளர் மின்னணுவியல் துறைகளுக்கு இது பயனளிக்கும்.

 

“உயர்தர மற்றும் மேம்பட்ட பி.சி.பிகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், ஆலையின் முழு உற்பத்தி திறன் எதிர்காலத்தில் 1 மில்லியன் சதுர அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

“தற்போதுள்ள ஆலை இரட்டை பக்கம் மற்றும் பல அடுக்கு பி.சி.பிகளை தயாரிப்பதைத் தொடரும். அதே நேரத்தில் புதிய ஆலை வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மேம்பட்ட உற்பத்தி திறன்களை மேம்படுத்துவதோடு, பல்வகைப்பட்ட புவியியல் உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும்,” என பினாங்கு மாநில முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் எல்னா பி.சி.பி இரண்டாவது ஆலையை திறந்து வைத்த பின்னர் தமதுரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

மேலும், இந்நிகழ்ச்சியில் மாநில சட்டமன்ற சபாநாயகர்  டத்தோஸ்ரீ லாவ் சூ கியாங், இன்வெஸ்ட்பினாங்கு தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ லூ லீ லியான், பினாங்கு மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (மிடா) இயக்குநர் முகமது கடாபி சர்தார் முகமது, பி.எஸ்.ஏ குழுமத் தலைவர் அந்தோணி சியாவ், பி.எஸ்.ஏ பி.சி.பி வணிகக் குழுத் தலைவர் லான்ஸ் தாவோ மற்றும் மலேசியாவில் உள்ள தைவான் வர்த்தக மற்றும் தொழில் சங்கத்தின் பினாங்கு நிலைக்குழு தலைவர் ஹ்சு ஷாங் சிஹ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

பினாங்கில் புதிய ஆலையை நிறுவுவது எல்னா நிறுவனத்தின் பெருமை என்று தாவோ கூறினார்.

 

புதிய எல்னா ஆலையின் திறப்பு விழா பி.சி.பி பிரிவிற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று குறிப்பிட்ட அவர், PSA உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு ஒரே இடத்தில் தொழில்துறையில் முன்னணி தீர்வுகளை வழங்க உறுதிபூண்டுள்ளது என்றார். மேலும் பலதரப்பட்ட மற்றும் உயர்தர தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கவிருப்பதாக உறுதியளித்தார்.

 

“உலகின் ஆறாவது பெரிய குறைக்கடத்தி ஏற்றுமதியாளராக, மலேசியா உலகளாவிய கூட்டாமை, பரிசோதனை மற்றும் பேக்கேஜிங் சந்தையில் 13% பங்கு வகுகின்றது.

 

“இதற்கிடையில், குறிப்பாக, பினாங்கு, மலேசியாவின் குறைக்கடத்தி தொழில்துறைக்கு ஒரு முக்கிய மையமாக திகழ்கிறது. நன்கு நிறுவப்பட்ட தொழில்துறை சுற்றுச்சூழல், வளமான திறமை மற்றும் சாதகமான வணிகச் சூழலோடு பினாங்கு முன்னனி வகிக்கின்றது.

 

“இவ்வாறு, பினாங்கில் ஒரு புதிய பி.சி.பி ஆலையை திறக்க எல்னாவின்  முடிவு, பிராந்தியத்தின் மின்னணு உற்பத்தி விநியோகச் சங்கிலியை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு வியூக நடவடிக்கையாகும்,” என்று அவர் கூறினார்.

 

எல்னாவின் புதிய உற்பத்தி ஆலை பினாங்கின் விருப்பமான இடமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக சாவ் கூறினார்.

 

“இன்றைய இந்நிகழ்ச்சி கடந்த ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டு விழா கண்டதிலிருந்து பினாங்கில் எல்னாவின் முதலீட்டு ஆரம்பமானது.

 

“எல்னாவின் புதிய ஆலைய ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் மட்டுமல்ல, பினாங்குக்கும் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிக்கிறது.

 

“பினாங்கில் இந்த இரண்டாவது பி.சி.பி ஆலையின் கட்டுமானமானது உற்பத்தி திறனை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பத்தை மாற்றும். மேலும், அதிநவீன பி.சி.பி தொழில்நுட்பத்தில் உள்ளூர் நிபுணத்துவத்தை வளர்ப்பது மற்றும் 1,000 கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்” என்று சாவ் விவரித்தார்.

 

பினாங்கில் 30 வருடங்கள் இருப்பதன் மூலம், எல்னாவின் விரிவாக்க முடிவு பினாங்கை முதலீட்டிற்கான நிலையான இடமாக பெரிதும் சான்றளித்துள்ளது.

 

இந்த விரிவாக்கம் பினாங்கில் உள்ள வலுவான தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை கோடிட்டுக் காட்டுகிறது, பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு தொடர்ந்து விரிவடைவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது என்று சாவ் குறிப்பிட்டார்.

 

“பினாங்கில் வலுவான தொழில் சூழலை உருவாக்க அனைத்துலக பங்காளிகள் மற்றும் உள்ளூர் தொழில்துறை நிறுவனங்களுக்கு இடையே அதிக ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.

 

அதே நேரத்தில், முதலீட்டாளர்களை ஈடுபடுத்துவதற்கும், திட்டச் செயலாக்கங்களை எளிதாக்குவதற்கும் மிடா மற்றும் இன்வெஸ்ட்பெனாங்கின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன்.

 

“ வரும் ஆண்டுகளில் எல்னாவின்  வெற்றிகரமான செயல்பாடுகள் மற்றும் செழிப்பான வணிகத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தப் புதிய அத்தியாயம் எல்னா மற்றும் பினாங்கு இரண்டிற்கும் செழிப்பைக் கொண்டுவரட்டும்,” என்று சாவ் விவரித்தார்.