பாயான் பாரு – 40 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட முன்னணி தட அடையாளம் கொண்ட நிறுவனங்களின் பங்கேற்புடன், 4-ஆவது ஆசியா மின்னணுவியல் கண்காட்சி மற்றும் 3-ஆவது பினாங்கு உற்பத்தி கண்காட்சியின் (PMAX) செத்தியா ஸ்பைஸ் மாநாட்டு மையத்தில் துவங்கியது.
இந்த மூன்று நாள் நிகழ்வு, பலவிதமான கண்காட்சியாளர்கள், கருத்தரங்குகள் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகள், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையின் சிறந்த நடைமுறைகள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை பங்கேற்பாளர்களுக்கு வழங்குகிறது.
கண்காட்சியின் தொடக்க விழாவின் போது, EMAX மற்றும் PMAX ஆலோசகர் பிலிப் வின்சென்ட், நிலையான தொழில்துறைக்கு ஒரு முக்கிய மையமாக உள்ளது என்பதை எடுத்துரைத்தார்.
“கண்காட்சியில் பல கண்காட்சியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் நிலையான தீர்வுகளை ஊக்குவிப்பதில் உறுதிபூண்டுள்ளனர், மேலும் பசுமையான நிலையான பொருளாதாரத்திற்கான மலேசியாவின் பார்வைக்கு இணங்குகிறார்கள்.
“அனைத்துலக கண்காட்சி, மாநாடு, தொழில்நுட்ப கருத்தரங்குகள், குழு விவாதங்கள், தொழில்நுட்ப திறன் போட்டிகள் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் போன்ற பல நடவடிக்கைகளை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம்.
“இக்கண்காட்சி பங்கேற்பாளர்கள் நுண்ணறிவுகளைப் பெறவும், கூட்டாண்மைகளை உருவாக்கவும் மற்றும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை ஆராயவும் உதவுகின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், ஆசியா குறைக்கடத்தி (SMAX) 2025, பினாங்கை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது. இது உலகளாவிய குறைக்கடத்தி மையமாக மலேசியாவின் நிலையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் வின்சென்ட் பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் இன்வெஸ்ட்பினாங்கின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ லூ லீ லியான், பினாங்கு மாநாடு மற்றும் கண்காட்சி பணியகத்தின் தலைமைச் செயல் அதிகாரி அஷ்வின் குணசேகரன், என்.ஆர்.ஜி கண்காட்சி நிறுவனர் மற்றும் குழும தலைமை அதிகாரி கென்னி யோங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.