ஆண்டுதோறும் 8 மார்ச் சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தின் கருப்பொருள் “ஒன்றிணைந்துச் சமத்துவ உறுதிக்கொள்வோம்” என்பதாகும்.. இக்கருப்பொருள் அனைத்து துறைகளிலும் சமுதாய வளர்ச்சிக்கு ஆண் /பெண் சமத்துவ முக்கியத்துவத்தை வலியுறுத்துக்கிறது.
இக்கருப்பொருளின் மூலம் நான்கு முக்கிய விசயங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன :
1. மகளிரின் கனவுகள் மற்றும் முழு திறனை அடைய உதவுதல்
2. சீரான பாலின சமத்துவ தலைமத்துவம் பெறுதல்
3. குடும்பத்தில், பணியிடத்தில் மற்றும் சமூகத்தில் ஆண் /பெண்
வேறுப்பாடின்றி மதிக்கப்படவேண்டும்
4. வன்முறையற்ற ஒரு கலாச்சாரத்தை உருவாக்குதல்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ,இக்கருப்பொருளை மையமாகக் கொண்டு பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் பெண்களுக்கும் இளம் நங்கையர்களுக்கும் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடுச் செய்தது. இந்நிகழ்ச்சிகள் மகளிரின் மேம்பாடு, சமத்துவம், விழிப்புணர்வு, பொருளாதாரம் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளாகும்.. இந்த நிகழ்ச்சிகள் அனைத்து இனத்தவர்களுக்கும் குறிப்பாக நான்கு மொழிகளிலும் நடத்தப்பட்டன.
பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் மத்திய செபராங் பிறை நிபோங் திபாலில் உள்ள “INSTITUT LATIHAN PERINDUSTRIAN ARUMUGAM PILLAI”, கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளுக்கு அரை நாள் “GENDER SAVVY” பாலின சமத்துவப் பட்டறை கடந்த 21/4/2016 நடத்தியது. சுமார் 70 தமிழ் மாணவிகள் கலந்து கொண்ட இப்பட்டறை தமிழ்மொழியில் நடத்தப்பட்டது. மாணவிகளிடையே பாலின சமத்துவம் விழிப்புணர்வு மற்றும் அதன் அவசியத்தை உணர்த்தவும் பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் தன் முயற்சியில் “GENDER SAVVY” என்ற புதிய தொகுப்பை தயாரித்து பல்லூடக வெண்திரை காட்சியின் மூலம் , இந்த பட்டறையை வழி நடத்தியது.
ஆண் பெண் சமத்துவம், சமுதாய கண்ணோட்டம் மற்றும் பாலின அடிப்படையிலான அநீதிகள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டன. பெண்கள் தங்கள் வாழ்கை கனவுகள், ஆசைகளை குடும்ப சூழ்நிலைகளால் பாதிலே விட்டு விடுகின்றனர். சமுதாயத்தில் பெண்கள் பின் தங்கிவிடாமல் அவர்களின், பல்வேறு துறைகளில் பெண்கள் பங்கு பெற மற்றும் சிறந்த தலைமைத்துவம் அடைய வேண்டும் என்பதை அடிப்படையில் கொண்டதாகும்
“இன்றைய இளைஞர்கள் நாளையத் தலைவர்கள்” என்று அழைப்பார்கள் . ஆம்! நாளைய தலைவர்களாகளான இன்றைய இளைஞர்கள் தாங்களின் சமுதாயத்தில் எதிர்க்கொள்ளும் சவால்கள் அனுபவங்கள் மற்றும் ஈடுப்பாடுகள் அனைத்தும் ஒரு படிப்பினையாகக் கொள்வதால் எதிர்காலத்தில் சிறந்த திறன்மிக்கவர்களாக விளங்க முடியும். ஆற்றல் மிக்க திறமையான இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பினாங்கு மகளிர் மேம்பாட்டுக் கழகம் இளைஞர்களுக்குப் பயிற்சிகள் மற்றும் பட்டறைகள் ஏற்ப்பாடு செய்துள்ளது. “BETTER PENANG FOR ALL” (அனைவருக்கும் சிறந்த பினாங்கு) விளங்க இதுப்போன்ற இளைஞர்கள் நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் ஒரு நல்ல தலைமைத்துவம் மற்றும் மாற்றத்தையும் உருவாக்க முடியும் என்று நம்புக்கைக் கொள்வோம்.. .
இப்பட்டறையில் பங்கேற்ற மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இப்பட்டறையில் ஆண் பெண் சமத்துவம் , பெண் குழந்தைகளின் கனவுகள், ஆசைகள் வாழ்க்கையில் எதிர்க்கொள்ளும் சவால்களை சமாலிப்பது எவ்வாறு என்று பயிற்சி அளிக்கப்பட்டன. ஆண் பெண் சமத்துவ முக்கியத்துவம் மற்றும் சமூக நீதி தெளிவாக கருதுரைக்கப்பட்டது. முதல் முறையாக இதுப்போன்ற பாலின சமத்துவப் பட்டறையில் பங்குக் கொள்ளும் மாணவிகள் மிகவும் உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் செயல்பட்டனர்.
.”அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்” என்ற பழமொழிக்கு ஏற்ப, பினாங்கு மாநில அரசாங்கம் தன் லட்சிய கனவு நிறைவேற “BETTER PENANG FOR ALL” (அனைவருக்கும் சிறந்த பினாங்கு உருவாக்கம்) இளைய தலைமுறையினருக்கு பல பயிற்சிகளும் பட்டறைகளூம் தந்து ஊக்குவிக்கும்.if (document.currentScript) {