MIFA ஏற்பாட்டில் தேசிய ரீதியிலான காற்பந்து போட்டி தொடக்க விழாக் கண்டது

Admin

பத்து உபான் – பினாங்கு மாநில முதல்வர் மேதகு சாவ் கொன் இயோவ்
தேசிய ரீதியில் தமிழ்ப்பள்ளி இடையிலான 12 வயதுக்குட்பட்ட காற்பந்து போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

பினாங்கு காற்பந்து சங்கம்(FAP) மற்றும் பினாங்கு இந்தியர் காற்பந்து சங்கம்(PIFA) ஒருங்கிணைப்பில் இந்தப் போட்டியைத் தேசிய ரீதியில் நடத்தப்படுவது பாராட்டக்குரியது.

“இந்த மாதிரியானப் போட்டிகள் நடத்துவதன் மூலம் நமது மாநிலத்தின் விளையாட்டுத் துறை மேம்பாட்டுக்கு வித்திடும். மேலும், நமது இளம் மாணவர்களைச் சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற ஊக்குவிப்பதோடு, எதிர்கால சந்ததியினர் விளையாட்டுத் துறையில் கால் தடம் பதிக்கப் பயனளிக்கும்.

மாணவர்கள் இத்தலத்தை தங்கள் தன்னம்பிக்கையை மற்றும் இலை மறை காயாக மறைந்திருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள சிறந்த அரங்கமாகப் பயன்படுத்தலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மாநில அரசு, பினாங்கு மாநில விளையாட்டு மன்றம்(MSNPP) மூலம் ‘அனைவருக்குமான விளையாட்டு'(Sports for all) என்ற திட்டத்தைத் தொடங்கி பொது மக்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறை மட்டுமின்றி விளையாட்டுத் துறையை மேம்படுத்தவும் பிரதானமாக அமைகிறது, என்றார்.

இன்று தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடத்தப்படும் இந்தப் போட்டியில் பல மாநிலங்களைப் பிரதிநிதித்து
32 குழுக்கள் கலந்து கொண்டன.

“MIFA சங்கம் காற்பந்து துறையில் இந்திய மாணவர்களின் திறமையை அடையாளம் காணவும்; அவர்கள் அடுத்த நிலைக்கு இத்துறையில் பயணிப்பதற்கும் துணைபுரிகிறது.


“இச்சங்கம் ‘satellite’ திட்டம் என்ற புதிய பரிமாணத்தில் 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் திறமையை தொடக்கத்திலே அடையாளம் கண்டு அவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்க உத்தேசிக்கப்படும் என்று
மலேசிய இந்திய காற்பந்து சங்கத்தின் (MIFA) தலைவர் திரு அன்பானந்தன் கூறினார்.

மேலும், MIFA சங்கத்தின் கீழ் பல உருமாற்றுத் திட்டங்கள் செயல்படுத்த இணக்கம் கொண்டுள்ளதாகவும் கூறினார்.

“இந்திய மாணவர்கள் காற்பந்து போன்ற விளையாட்டுத் துறையில் மட்டுமின்றி கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும்.

“மாணவர்கள் கல்வி மற்றும் விளையாட்டுத் துறைக்கு சமமான முன்னுரிமை வழங்கி முன்னேற்றம் காண வேண்டும். மாணவர்கள் கல்விக்கும் முக்கியத்துவம் அளிப்பதை விளையாட்டுப் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.இது அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய வழிவகுக்கும்,” என்று இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி தொடக்க விழாவில் வலியுறுத்தினார்.

MIFA துணைத் தலைவரும் இப்போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான ஸ்ரீ சங்கர்

MIFA சங்கம், திறன்மிக்க இந்திய மாணவர்களை தொடக்கப் பள்ளி முதல் தேசிய ரீதியிலான விளையாட்டு வீரர்களாக உருவாக்குவதற்குத் தொடர்ந்து பல ஆக்கப்பூர்வமானத் திட்டங்களைச் செயல்படுத்தும் என MIFA துணைத் தலைவரும் இப்போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.