PBAHB நிறுவனம் சவால்கள் எதிர்நோக்கியப் போதிலும் இலாபம் பதிவு

Admin

பாயான் பாரு – மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கோன் இயோவ் 2022ஆம் நிதியாண்டில், PBA ஹொடிங் பெர்ஹாட் (PBAHB) நிறுவனம் ரிம77.12 மில்லியன் வரிக்குப் பிந்தைய இலாபத்தைப் பெற்றதாக அறிவித்தார்.

கடந்த காலங்களில் சவால்களை எதிர்கொண்ட போதிலும், PBAHB இன் முதன்மை துணை நிறுவனமான பினாங்கு நீர் விநியோக வாரியம் (PBAPP) 2022-இல் ஒரு பாராட்டத்தக்க சேவையைச் வழங்கியுள்ளதை சாவ் முன்னதாக அறிவித்தார்.

PBAPP 2022 இல் மலேசியாவில் மாதத்திற்கு முதல் 35,000 லிட்டருக்கு மிகக் குறைந்த உள்நாட்டு நீர் கட்டணத்தை வசூலித்துள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். PBAPP ஒரு மாதத்திற்கு அதன் முதல் 35,000 லிட்டருக்கான சராசரி உள்நாட்டு கட்டணமானது 1,000 லிட்டருக்கு 32 சென் மட்டுமே, இது 2020 இல் தேசிய சராசரியான 1,000 லிட்டருக்கு 77 சென் என்ற கட்டணத்தை விட 141% மலிவானது.

“1,000 லிட்டருக்கு 32 சென் என்ற உள்நாட்டு கட்டணத்தைத் தக்கவைக்க, PBAPP 2022 இல் ரிம103.71 மில்லியன் உள்நாட்டு நீர் உதவித் தொகை அளிக்க வேண்டியிருந்தது.

“எனவே, PBAPP 2022 ஆம் ஆண்டில் மலேசியாவிலே மிகவும் திறன் மிக்க நீர் விநியோக வாரியத்தில் ஒன்றாக தன்னை நிரூபித்துள்ளது. இலாபத்தை ஈட்டும் நோக்கத்தில் மட்டுமே செயல்படாமல், 585,740 உள்நாட்டு நீர் பயனீட்டாளர்களின் நலனுக்காக உள்நாட்டு நீர் உதவித் தொகை வழங்குவதன் மூலம் பினாங்கிற்கு குறிப்பிடத்தக்க பெருநிறுவன சமூகப் பொறுப்பு உறுதிப்பாட்டை நிறைவேற்றுகிறது,” என செய்தியாளர் PBAPP 2022 பங்களிப்பு பற்றிய கேள்விக்கு சாவ் இவ்வாறு பதிலளித்தார்.

“இலாபத்தை நோக்கி மட்டுமே செயல்படாமல், 585,740 உள்நாட்டு நீர் பயனீட்டாளர்களின் நலனுக்காக உள்நாட்டு நீர் மானியங்களை வழங்குவதன் மூலம் பினாங்கிற்கு ஒரு குறிப்பிடத்தக்க பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) உறுதிப்பாட்டை நிறைவேற்றியுள்ளது” என்று அமரி தங்கும்விடுதியில் நடைபெற்ற PBAPP இன் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (AGM) கலந்து கொண்ட பின்னர் ஓர் ஊடக கூட்டத்தில் சாவ் விளக்கினார்.

அதன் தொடர்புடைய வளர்ச்சியில், 2022 ஆம் ஆண்டிற்கான PBAHB இன் ஈவுத்தொகையானது ஒரு பங்கிற்கு 3.0 சென் என்றும், 2022 ஆம் ஆண்டின் இறுதியில் (டிசம்பர் 31) ஒரு பங்கிற்கு 1.5 சென் கூடுதல் ஈவுத்தொகையை இக்கூட்டத்தில் அங்கீகரித்ததாக சாவ் இன்று அறிவித்தார்.

“இந்த ஈவுத்தொகைக்கான மொத்தம் ரிம4.96 மில்லியன், வருகின்ற 28.7.2023 அன்று அனைத்து பங்குதாரர்களுக்கும் வழங்கப்படும்,” என குறிப்பிட்டார்.

அதாவது 2022ஆம் ஆண்டிற்கான PBAHBயின் ஈவுத்தொகை ஒரு பங்கிற்கு 3.0 சென் ஆகும். PBAHB அதன் பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகையை வழங்கும் 2023 ஆம் ஆண்டானது தொடர்ச்சியாக 22 வருடங்களாக வழங்குவதை குறிக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும். 2001 ஆம் ஆண்டிலிருந்து எவ்வித ஈவுத்தொகையையும் வழங்க தவறியதில்லை என சாவ் மேலும் கூறினார்.

PBAPP மாநிலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள முக்கிய நீர் விநியோகத் திட்டங்களைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரிம1.185 பில்லியன் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டங்களை செயல்படுத்த
மூலதனச் செலவினங்களுக்கு (CAPEX) நிதியளிப்பதில் உள்ள சவால்களை சாவ் விவரித்தார்.

“இந்நிறுவனம் அதன் CAPEX -க்கு நிதியளிக்க போதுமான நிதி கொண்டிருக்கவில்லை என்றால், மாநிலத்தில் குழாய் மாற்றுதல் உட்பட, CAPEX நோக்கங்களுக்காக குறைவான பணத்தைப் பயன்படுத்த இயலும்.

“முக்கிய திட்டங்களைத் தொடங்க CAPEX-க்கு போதுமான நிதி இல்லை என்றால், வணிக வங்கிகளிடமிருந்து கடன் பெற விண்ணப்பிப்பது போன்ற வெளிப்புற நிதியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை,” என்று சாவ் கூறினார்.

PBAPP இன் நீர் தற்செயல் திட்டம் 2030 (WCP 2030) கீழ்
ஐந்து அசல் முக்கிய கூறுகள் மற்றும் மூன்று புதிய கூறுகளும் இடம்பெறுகின்றன.

Bukit Panchor dissolved air flotation (DAF) நீர் சுத்திகரிப்பு நிலையம் (WTP), தொகுப்பு 12A, சுங்கை டுவா WTP: கூடுதல் புதிய நீர் சுத்திகரிப்பு பகுதி, புதிய மெங்குவாங் அணை WTP, புதிய சுங்கை கெரியன் WTP (கட்டம் 1) மற்றும் சுங்கை பிறை நீர் விநியோகத் திட்டம் (மூல நீரை முன்கூட்டியே சுத்திகரிப்பது உட்பட) ஆகிய ஐந்து அசல் முக்கிய கூறுகள் இதில் அடங்கும்.

WCP 2030 இன் மூன்று கூடுதல் புதிய கூறுகளைப் பொறுத்தவரை, முதல் இரண்டு, சுங்கை டுவா WTP இலிருந்து பட்டர்வொர்த் வரையிலான 13 கிமீ 1,800 மிமீ நீர் விநியோகக் குழாய்கள் மற்றும் தீவில் உள்ள PBAPP புக்கிட் டம்பார் நீர்த்தேக்கம் மற்றும் பம்பிங் ஸ்டேஷன் வளாகத்திற்கு 3.9கிமீ 1,800மிமீ நீர் விநியோக குழாய்களை மக்கல்லம் பகுதியிலிருந்து அமைத்தல் ஆகியவை அடங்கும்.

இந்த மூன்றாவது புதிய கூற்றில் சுங்கை மூடாவில் கூடுதல் WTP-ஐ உருவாக்கி, நாளொன்றுக்கு 114 மில்லியன் லிட்டர் (MLD) நீர் சுத்திகரிப்பு உற்பத்தியை அதிகரிப்பதாகும்.

மேலும், முன்னதாக செய்தியாளர் சந்திப்பின் போது மாநில செயலாளர் டத்தோ முகமட் சாயுத்தி பாக்கர், முதலாம் துணை முதலமைச்சர் டத்தோ அமாட் சாக்கியுடின் அப்துல் ரஹ்மான், இரண்டாம் துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் ப.இராமசாமி மற்றும் PBAPP தலைமை நிர்வாக அதிகாரி பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.