பினாங்கு அனைத்துலக மாநாடு மற்றும் கண்காட்சி செயலக (Penang International Convention & Exhibition Bureau () தலைமை நிர்வாக அதிகாரியாக ஓர் இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளார். சுவிர்சிலாந்தில் இளங்கலை பட்டம் பெற்ற திரு. அஸ்வின் குணசேகரன் அச்செயலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இச்செயலகம் பினாங்கு மாநிலத்தில் அனைத்துலக மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் நடைபெற ஏதுவாக துணைபுரியும் என செய்தியாளர் சந்திப்பில் பேசினார் மாநில முதல்வர் மேதகு லிம் குவான் எங். இதனிடையே, “ஸ்பைஸ்” எனும் அனைத்துலக மாநாடு அரங்கத்தின் மறுசீரமைப்புப் பணிகள் பினாங்கு மாநிலம் அனைத்துலக ரீதியில் சிறந்த தளமாக அமையும் என நம்பிக்கைத் தெரிவித்தார். பினாங்கு அனைத்துலக மாநாடு மற்றும் கண்காட்சி செயலகம் ஒரு இலாபமற்ற அமைப்பு என்றும் பினாங்கு மாநிலத்தை அனைத்துலகத்தில் பிரசித்திப் பெறுவதற்கு உதவும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்நியமனம் வணிகம், முதலீடு, சுற்றுலா வர்த்தகத்தின் மூலம் பினாங்கிற்கு பொருளாதார வளர்ச்சியை ஈட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது