PICKids திட்டத்தில் நோய் தாக்கும் அதிக வாய்ப்புகள் கொண்ட சிறாருக்கு முன்னுரிமை

Admin

ஜார்ச்டவுன் – பினாங்கு மாநில அளவிலான கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (PICKids) கீழ் ஐந்து முதல் 11 வயதுடைய சிறாருக்கான முதல் டோஸ் தடுப்பூசி வழங்கத் தொடங்கியது.

மாநில அளவிலான PICKids திட்டத்தில் நோய் தாக்கும் அதிக வாய்ப்புகள் கொண்ட சிறாருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை தொழில்நுட்பம் மற்றும் உணவுப் பாதுகாப்பு, புறநகர் மேம்பாடு மற்றும் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் நோர்லேலா அரிஃபின் கூறினார்.

ஆட்சிக்குழு உறுப்பினர் நோர்லேலா அரிஃபின் கூறினார்.

“PICKids திட்டத்தின் தொடக்கத்தில், மருத்துவமனை தரப்பினர் முதல் 10 சிறாருக்கு தடுப்பூசிகளைப் பெற அனுமதித்தது. இதன் மூலம், தடுப்பூசி செலுத்திய சிறாரின் உடல்நிலை குறித்த கண்காணிப்பு மற்றும் அதே நேரத்தில் எதிர்கொள்ளும் பக்க விளைவுகளையும் அடையாளம் காண முடியும்.

“மேலும், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள்
தடுப்பூசி போடப்பட்ட சிறார் எந்தவிதமான கடினமான செயல்களைச் செய்யாமல் இருப்பதையும், குறைந்தது இரண்டு வாரங்கள் ஓய்வெடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும்,” என
பினாங்கு பொது மருத்துவமனை, ஸ்ரீ புத்ரி தடுப்பூசி மையத்தில் சிறாருக்கானத் தடுப்பூசி போடும் செயல்முறையைக் கண்காணித்தப் பின்னர் இவ்வாறு கூறினார்.

அதே நேரத்தில், இயல்பான சிறாருக்கும் தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நோர்லேலா தெரிவித்தார்.

“பினாங்கு மாநிலக் கல்வித் இலாகாவுடன் (ஜே.பி.என்) கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு, அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் சுகாதார கிளினிக்குகள் மூலம் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்படுகிறது.

“இதுவரை, ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட 160,000 சிறாரில் 40,000 பேர் தடுப்பூசி போட பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த முயற்சி அவர்களை தொற்று அபாயத்திலிருந்து பாதுகாக்கும்,” என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

இதற்கிடையில், சிவ்யன் மற்றும் தன்வின் ஆகிய இரண்டு மகன்களின் தாயான
மருத்துவர் மாலினி, அவர்கள் தடுப்பூசியைப் பெற
ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

“தனது இரு மகன்களும் தங்களுக்கு எப்போது தடுப்பூசி போடுவார்கள் என்று கேட்பார்கள். ஏனென்றால், தடுப்புசிப் பெற்றால் பிற சிறாருடன் வெளியில் சென்று விளையாடுவது பாதுகாப்பானது, என கருதுகின்றனர்.

“அவர்கள் தடுப்பூசியைப் பெறும்போது நிதானமாக
இருந்தார்கள்.

“எனவே, இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி அனைத்து தரப்பினரும் தடுப்பூசியைப் பெறுமாறுக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று பினாங்கு பொது மருத்துவமனையின் சிறார் நிபுணத்துவ மருத்துவரான மாலினி கூறினார்.