SFZ திட்டத்தை செயல்படுத்துவதில் பினாங்கு அரசாங்கம் பாதுகாப்பான அணுகுமுறையை மேற்கொள்ளும்

Admin
1133d11c 426e 4251 b50e 23316d71374c

ஜார்ச்டவுன் – பினாங்கில் சிறப்பு நிதி மண்டலத்தை (SFZ) நிறுவுவதை இறுதி செய்வதற்கு முன்னதாக ஆலோசிக்க வேண்டியதன் அவசியத்தை பினாங்கு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இது மாநிலத்தின் பொருளாதாரத்திற்கான சக்தி வாய்ந்த வளர்ச்சி இயந்திரமாக அதன் திறனை அங்கீகரிக்கும்.

மாநில முதலமைச்சர் மேதகு சாவ் கொன் இயோவ், பினாங்கில் ஒரு SFZ திட்டத்தை வளர்ச்சி இயந்திரமாக உருவாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை தற்போது பினாங்கு இன்ஸ்திதுட் (PI) ஆய்வு மேற்கொள்கிறது.

“பினாங்கில் SFZ ஐ செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து பினாங்கு இன்ஸ்திதுட் மூலம் மாநிலத்திற்கு விளக்கப்பட்டுள்ளது

“இந்த ஆண்டு செப்டம்பர்,24 அன்று ஒரு பொது பட்டறை நடைபெற்றது, இதில் தளவாடங்கள், வர்த்தகம் மற்றும் நிதித் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 100-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

“93% பங்கேற்பாளர்கள் இந்த முன்முயற்சிக்கு ஆதரவைத் தெரிவித்தனர்.

“இளம் பட்டதாரிகளுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், மேம்பட்ட உள்ளூர் உற்பத்திக்கான நிதியுதவி மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பிராந்திய வணிக மையமாக பினாங்கின் நிலையை உறுதிப்படுத்த வெளிநாட்டு முதலீட்டின் அதிகரிப்பு ஆகியவை அடையாளம் காணப்பட்ட முக்கிய நன்மைகள் ஆகும்,” என்று அவர் தனது தொகுப்புரையில் கூறினார்.

‘fintech, startup financing, equity crowdfunding, maritime trade மற்றும் cryptocurrency finance’ போன்ற பினாங்குக்கு முன்னுரிமை அளிக்கும் நம்பிக்கைக்குரிய நிதித் துறைகளையும் பங்கேற்பாளர்கள் சுட்டிக்காட்டியதாக சாவ் கூறினார்.

“SFZ க்காக பரிசீலனையில் உள்ள முக்கிய இடங்களில் கர்னி பே மற்றும் அந்தமான் தீவு ஆகியவை அடங்கும். இருப்பினும் போக்குவரத்து நெரிசல், திறன் மிக்க மனிதவள பற்றாக்குறை மற்றும் குறைந்த ஊதிய சலுகைகள் இத்திட்டத்தின் வெற்றியைப் பாதிக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.

பினாங்கு இன்ஸ்திதுட் தலைமையிலான முன்முயற்சி, ஆராய்ச்சிக் கட்டத்தில் உள்ளது, மேலும் மதிப்பீட்டிற்குப் பிறகு மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் பரிசீலிக்கப்படவுள்ளன.

இந்த முன்மொழிவின் கட்டமைப்பைச் செம்மைப்படுத்த தொழில் வல்லுநர்களுடனான அமர்வு இந்த ஆண்டு நவம்பர் 27 அன்று நடைபெற்றது