ஜார்ச்டவுன் – வருகின்ற மே 3 மற்றும் ஆம் தேதிகளில் பத்து காவான் வவாசான் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள STEM கண்காட்சி 2024 இல் பினாங்கு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து 10,000 மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களை கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் துணை முதலமைச்சரும் மனித மூலதன மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜக்தீப் சிங் டியோ, இந்நிகழ்ச்சி செபராங் பிறையில் நடைபெறும் மிகப்பெரிய STEM கண்காட்சியாக அமையும், என்றார்.
இதில் பட்டறைகள் வழிநடத்த ஏற்பாடு செய்துள்ள 2,800 கூடங்களில் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் 1,200 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
“பினாங்கைப் பொறுத்தவரை, இளைஞர்களிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வத்தை வளர்ப்பதற்கு STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
“நாங்கள் இந்த கண்காட்சி மட்டுமின்றி மேலும் பல திட்டங்களையும் செயல்படுத்துகிறோம். உதாரணமாக, தெக் டோம் பினாங்கு, பினாங்கு அறிவியல் கிளஸ்டர் மற்றும் பினாங்கு கணித தளம் ஆகியவை இந்த இலக்கை அடைய மிகவும் கடினமாக பயணிக்கின்றனர்,” என்று ஜக்தீப் கொம்தாரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
STEM கண்காட்சி 2024 இன் இணை ஆதரவாளர் டெக் டோம் பினாங்கு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சகம் (Mosti) மற்றும் மலேசிய வவாசான் பல்கலைக்கழகம், KDU கல்லூரி ஆகிய தரப்பினரின் கூட்டு முயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“STEM பட்டறைகள், STEM அனுபவம் & கண்டுபிடிப்பு, பிரமை கார், வாட்டர் ராக்கெட் மற்றும் 1 முதல் 6 ஆண்டு மாணவர்கள் வரையிலான வினாடி வினா உள்ளிட்ட ஆறு STEM போட்டிகள், தொழில்துறை கண்காட்சிகள் ஆகியவை இதில் இடம்பெறும். STEM கண்காட்சி 2024 அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் STEM மீதான ஆர்வத்தைத் தூண்டும் என உறுதியளித்தார்.
“எங்களுடன் 35 STEM கூட்டாளர்கள் மற்றும் 15 தொழில்துறை ஆதரவாளர்கள் இத்திட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
“டெக் டோம் பினாங்கின் இணையதளம் வாயிலாக ஆர்வமுள்ள மாணவர்கள்
பட்டறைகளில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று ஜக்தீப் மேலும் கூறினார்.
பினாங்கும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு தற்போது தொழில்நுட்ப திறன் கற்றல் (TSL
என்ற திட்டத்தை கூட்டு முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அவர் வெளிப்படுத்தினார். இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் ஒரு வெற்றிகரமான முயற்சியாக கருதப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இச்செய்தியாளர் சந்திப்பில் முஹம்மது ஃபிக்ரி ரோம்லி, மூத்த உதவிச் செயலாளர் (கலாச்சார பிரிவு,Mosti); கூ பூ வூய், டெக் டோம் பினாங்கின் தலைமை நிர்வாக அதிகாரி; கோய் லின் லின் மற்றும் தொழில்துறை கூட்டுப்பணியாளர்களின் பிரதிநிதிகளும் இடம்பெற்றனர்.