அண்மைச் செய்திகள்
கல்வி
தமிழ்
முதல் தமிழ் இடைநிலைப் பள்ளியை நிர்மாணிக்கப் பினாங்கு மாநிலம் நிலம் வழங்கத் தயார். முதல்வர் லிம் குவான் எங் அறிவிப்பு
பிப்ரவரி 17- கொம்தார் ஏ அரங்கத்தில் நடைபெற்ற மானியம் வழங்கும் நிகழ்ச்சியில் மக்களின் தேவைகளை முன் நிறுத்தி சேவையாற்றும் பினாங்கு மக்கள் கூட்டணி அரசு தொடர்ந்து ஐந்தாம் முறையாக பினாங்கில் அமையப்பெற்றுள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் 1.75 மில்லியன் நிதி ஒதுகீட்டைப் பகிர்ந்தளித்தது. பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உந்து சக்தியாகத் திகழ்ந்து வரும் மக்கள் கூட்டணி அரசு பினாங்கு வாழ் இந்தியர்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவு செய்து வருகிறது...