“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை” இவ்வுலகில் என்றும் அழியாச் செல்வமாகத் திகழ்வது கல்வி ஒன்றே. அதற்கொப்பான செல்வம் வேறு எதுவுமே இல்லை என்று பொய்யாமொழி புலவரான திருவள்ளுவரின் திருக்குறள் வலியுறுத்துகிறது. இந்தக் கல்விச் செல்வத்தைப் பெருவதற்காக ஒன்றுகூடும் தளமே பள்ளிக்கூடம். கல்விக்கு அடித்தளமாக விளங்கும் அந்தப் பள்ளிக்கூடமே சரியாக அமையாவிடில் மாணவர்களின் நிலைதான் என்ன? 1955-ஆம் ஆண்டு குலுகோர் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலால் சுமார் 40...