சட்டமன்றம்
தமிழ்
கட்சித் தாவல் தடைச் சட்டத்தை முயற்சி செய்து அமல்படுத்துவோம்: மாநில உயர்மட்டத் தலைவர்கள் வலியுறுத்து.
ஆகஸ்ட் 29- இங்கு கொம்தார் ஐந்தாம் மாடியில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் விருந்துபசரிப்பில் ஊடகத்துறையாளர்கள் சந்திப்புக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டது. பினாங்கு மாநிலத் தலைவர்கள் தங்களது அதிகாரப்பூர்வச் சந்திப்புக் கூட்டத்தில் பகர்ந்து முடிவெடுத்த சில தீர்மானங்களை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் இந்த ஊடகத்துறையாளர்கள் சந்திப்புக் கூட்டமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்ட விடயம் கட்சித் தாவல் தடைச் சட்டத்தைப் பற்றியதாகும். பினாங்கு மாநில முதல்வர் திரு லிம் குவான்...