தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’ பினாங்கு இந்திய மக்களுக்கு வலியுறுத்து
2008-ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் அமர்ந்துள்ள மக்கள் நலன் பேணும் பினாங்கு மக்கள் கூட்டணி அரசால் பல தங்கத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நேர்மையான ஆட்சியின் மூலம் வரவு செலவு கணக்கில் கிடைக்கப்பெற்ற மாநில அரசின் மிகை நிதியைக் கொண்டு பினாங்கு மக்களுக்கு உதவும் வண்ணம் இத்தங்கத் திட்டங்களின் வழி நிதியுதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன. எனினும், இந்நிதியுதவிகளைப் பெறுவதில் பினாங்கு இந்திய மக்கள் குறிப்பாகக் கிராமப்புற மக்கள் பிந்தங்கியுள்ளனர் என்றும் உடனே...