தமிழ்
மகளிர், சமூகம், இளையோர் மற்றும் விளையாட்டு
தியாகத்தின் பிம்பம் விடுதலை நாள்; நமக்கெல்லாம் ஒற்றுமைத் திருநாள்
நம் முன்னோர்களின் பல்வேறு போராட்டங்களையும் தியாகங்களையும் கடந்து இன்று நாம் விடுதலை பூமியில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்கள் சிந்திய வியர்வைகளும் குருதிகளும்தான் இன்று நம்மைச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க வைத்திருக்கின்றன. 1957-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் திகதி பல இன்னல்களைத் தாண்டி ஆங்கிலேயர்களிடமிருந்து பெறப்பட்ட இந்த விடுதலை நாளை நினைவுகூர்ந்து, அரசாங்கத் தலைவர்கள் உட்பட குடிமக்கள் யாவரும் இம்மண்ணின் அமைதியையும் ஒற்றுமையையும் நிலைநிறுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க...