xFusion முதல் உலகளாவிய விநியோக மையத்தை பினாங்கில் அமைக்கிறது

Admin

பிறை – கணினி உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்கும் முன்னணி உலகளாவிய வழங்குநரான xFusion International தனியார் நிறுவனம் தனது முதல் உலகளாவிய விநியோக மையத்தை அமைக்க பினாங்கை தேர்ந்தெடுத்துள்ளது.

அதிநவீன உலகளாவிய விநியோக மையம் xFusion மற்றும் பினாங்கை தளமாகக் கொண்ட நிறுவனமான NationGate Holdings Berhad ஆகியவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்பில் நிறுவப்பட்டுள்ளது.

இது பிறை தொழில்துறை மண்டலத்தில் அமைந்துள்ள, 254,491 சதுர அடி உலகளாவிய விநியோக மையம் நேஷன்கேட் கட்டிடத்திற்குள் அமைந்துள்ளது.

xFusion தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெஃப்ரி லியு, பினாங்கில் உலகளாவிய விநியோக மையத்தைத் திறப்பது இந்நிறுவனத்தின் வெளிநாட்டு மேம்பாட்டுக்கு ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைகிறது என்று கூறினார்.

“இந்த அதிநவீன மையம், அதன் முக்கிய சந்தைகளின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தொடர்ச்சியான, நிலையான விநியோகத்தை உறுதிசெய்ய, உலகளாவிய விநியோக வலையமைப்பை வலுப்படுத்தும்.

“கிழக்கு சிலிக்கான் பள்ளத்தாக்கு என்றுஅழைக்கப்படும் பினாங்கு, xFusion உலகளாவிய விநியோக மையத்தை அமைப்பதற்கு ஏற்ற இடமாகும்.

“பல துறைகளில் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், பினாங்கில் எங்கள் புதிய நிறுவனம் அமைக்கை மகிழ்ச்சியடைகிறோம். இது தொழில்துறையின் வளர்ச்சியை மேலும் ஆதரிக்கும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது,” என்று மாநில முதலமைச்சர் சாவ் கொன் இயோவ் தனது உரையில் கூறினார்.

மேலும், மாநில உள்ளாட்சி, நகர் மற்றும் புறநகர்த் திட்டமிடல் ஆட்சிக்குழுத் தலைவர் ஜேசன் ஹெங் மூய் லைய், முதலமைச்சரின் சிறப்பு முதலீட்டு ஆலோசகர் டத்தோஸ்ரீ லீ கா சூன், பினாங்கில் உள்ள சீனத் தூதரகத் அதிகாரி சோ யூபின், இன்வெஸ்ட்பெனாங்கின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ லூ லீ லியான் மற்றும் NationGate நிர்வாக இயக்குனர் உய் எங் லியோங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ரிம1.7 பில்லியன் முதலீட்டு மதிப்புடன், இந்த அதிநவீன மையம் ஆண்டுதோறும் 150,000 யூனிட் ‘servers’ உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக அமையும் என்றும் லியு கூறினார்.

“எனவே, இந்த விநியோக மையத்தை xFusion இன் சர்வதேச சந்தைக்கான முக்கிய மையமாக திகழும், வருடத்திற்கு graphics processing unit (GPU) servers உட்பட உபகரணங்களின் 150,000 யூனிட்கள் இங்கு உற்பத்தி செய்யப்படும்.

“NationGate உலகளாவிய சந்தைக்கான GPU சேவையகங்களையும் தயாரிக்கும். GPU servers என்பது தரவு மையங்களுக்காக வடிவமைக்கப்பட்ட உயர் ஆற்றல் கொண்ட சேவையகமாகும். மேலும் அவை செயற்கை நுண்ணறிவு, உயர் செயல்திறன் கணினி, தரவுத்தளம் மற்றும் வீடியோ பகுப்பாய்வு காட்சிகளுக்குப் பொருந்தும்,” என்றார்.

“பினாங்கில் 12 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட, NationGate அதன் வாடிக்கையாளர்களுக்கு EMS உற்பத்தி சேவைகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது. அவர்களில் பலர் நெட்வொர்க்கிங் மற்றும் தொலைத்தொடர்பு, தொழில்துறை கருவிகள், தரவுக் கணினி, நுகர்வோர் மின்னணுவியல், வாகனம் மற்றும் குறைக்கடத்தி போன்ற உயர் வளர்ச்சித் துறைகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளனர்.

“மேலும் இந்த ஒத்துழைப்பு NationGate இன் மதிப்புச் சங்கிலியில் எங்கள் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்கான பயணத்தை மேலும் ஆதரிக்கும். இது ஒரு புகழ்பெற்ற EMS வழங்குநராக எங்கள் நிலையை உறுதிப்படுத்தும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், இந்த சிறந்த திட்டத்தை இன்று யதார்த்தமாக மாற்றியதற்காக xFusion மற்றும் NationGate ஐ சாவ் பாராட்டினார்.

“இத்தகைய கூட்டு முயற்சிகள் பலனளிப்பதைக் காண்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இது பினாங்கின் சாதகமான சூழலைப் பறைசாற்றுகிறது, இது நமது உள்நாட்டு நிறுவனங்களின் வளர்ச்சியை வளர்க்கும் திறன் கொண்டது. எனவே உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஒருங்கிணைப்பை துரிதப்படுத்துகிறது.

“எனவே, இந்த புதிய உலகளாவிய விநியோக மையமானது xFusion இன் உலகளாவிய விநியோக வலையமைப்பை வலுப்படுத்தும் அதே வேளையில், உலகளாவிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தொடர்ச்சியான மற்றும் நிலையான விநியோகத்தை உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன்.

“பினாங்கில் வளர்ந்து வரும் தொழில்துறைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில், தொழில்துறை குழுக்களை மேலும் மேம்படுத்த உறுதிபூண்டுள்ளது. இதில், xFusion-கான தேர்வு இடமாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

“மேலும் xFusion மற்றும் NationGate இடையிலான இந்த ஒத்துழைப்பு சிறந்த ஆற்றலாக மாறும் என்று நான் நம்புகிறேன். இது பினாங்கின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பை மட்டுமே பலப்படுத்தும்,” என்று அவர் கூறினார்.