அனுமதியின்றி கட்டுமானப் பணி தொடங்குவோர் மீது நடவடிக்கை உறுதி – பத்தாயா

SONY DSC
SONY DSC

பினாங்கு மாநகர் கழக அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் கட்டுமானம் அல்லது சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க பினாங்கு மாநகர் கழக செயலவை குழு உறுதிப் பூண்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக கருத்துரைத்த பினாங்கு மாநகர் கழகத் தலைவர் டத்தோ பத்தாயா இஸ்மாயில், அவப்போது இத்தகைய செயல்களில் ஈடுபடும் தனியார் நிறுவனம் மற்றும் தனிநபர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாகக் கூறினார்.
இவ்வரிசையில் மரங்கள் வெட்டுதல்; காட்டழித்தல், மற்றும் கட்டிட அமைப்பை மாற்றியமைத்தல்; சுற்று சூழலுக்குக் கேடு விளைவித்தல் போன்ற நடவடிக்கைகளும் அடங்கும் என அவர் தமதுரையில் விளக்கமளித்தார்.
தொடர்ந்து, பத்தாயா கூறியதாவது, தற்பொழுது பினாங்கு மாநகர் கழகம் வித்திட்ட ஒழுங்குமுறைக்குப் புறம்பாக செயல்பட்டு மேல் கூறியவாறான நடவடிக்கைகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 19 (1) கட்டத்தின் கீழ் மாநகர் மற்றும் நாட்டுப்புற திட்டமிடல் 1976 சட்டத்தின்படி RM500,000 அபராதம் அல்லது ஈராண்டு கால சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே வித்திக்கப்படும் என பத்தாயா அறிவித்தார்.
மேலும், அனுமதியின்றி தொடங்கப்படும் எந்தவொரு கட்டுமானம் அல்லது சீரமைப்பு சார்ந்த பணிகளுக்குக் காரணியாக அமைவோரின் மீது 70(A) கட்டத்தின் கீழ் சாலை, கால்வாய் மற்றும் கட்டிட அமைப்புச் சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் RM5000 அபராதம் அல்லது ஐந்தாண்டு கால சிறைத் தண்டணை; அல்லது இரண்டுமே வித்திக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
பினாங்கு மாநகர் கழகத்த்தின் அனுமதியின்றி கட்டுமானம் அல்லது சீரமைப்புப் பணியை மேற்கொண்டோரின் மீது சட்ட நடவடிக்கை மற்றும் தண்டணைக் குறித்த விவகாரங்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் அரசாங்க தரப்பு வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்டிருந்தாலும், சட்ட நெறி முறைகளைப் புறக்கணிப்போருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க பினாங்கு மாநகர் கழகம் அதன் நிலைப்பாட்டை உறுதிக் கொள்ளும் எனவும் பத்தாயா அறிவுறுத்தினார்.
இது தொடர்பாக கடந்தாண்டு தனிநபர் ஒருவர் மீது மலைப் பகுதி அழிப்பு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்ட நிலையில் இனி தொடர்ந்து, பினாங்கு மாநகர் கழகம் இதுபோன்ற செயல்களைப் புரிவோர்களைக் கண்டறிவதில் முனைப்புக் கொள்ளும் எனவும் தெரிவித்தார்.} else {